போட்டி வேற.., வாழ்க்கை வேறங்க.., பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளர்கள் Reunion.., அசத்தல் போட்டோ வெளியீடு!!

0
போட்டி வேற.., வாழ்க்கை வேறங்க.., பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளர்கள் Reunion.., அசத்தல் போட்டோ வெளியீடு!!
போட்டி வேற.., வாழ்க்கை வேறங்க.., பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளர்கள் Reunion.., அசத்தல் போட்டோ வெளியீடு!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளர்கள் குறித்து முக்கிய அப்டேட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6:

உலகநாயகன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விஜய் டிவியின் டிஆர்பியை முதலிடத்தில் வைத்திருந்தது. இதற்கு முன்னர் நடந்த சீசன்களை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது, இந்த சீசனில் அதிக போட்டியாளர்கள் களமிறங்கினர். இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த வார இறுதியில் ஒவ்வொருவராக எலிமினேட் ஆகி வெளியேறினர். மேலும் பிக்பாஸ் சீசனின் கடைசி வாரத்தில் நந்தினி வெளியேறினார். அந்த வாரத்தின் இடையில் அமுதவாணன் 12 லட்சம் பண பெட்டியை எடுத்து சென்றார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதை தொடர்ந்து விக்ரமன், அசிம் மற்றும் சிவின் ஆகியோர் பைனலிஸ்ட்டாக இருந்தனர். இந்த நிலையில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நடந்த பைனல் எபிசோடில், சின்னத்திரை நடிகர் அசிம் பிக்பாஸ் சீசன் 6 டைட்டிலை அடித்து, கோப்பை மட்டுமின்றி 50 லட்சம் பணத்தொகையை பரிசாக வாங்கினார். இரண்டாவது இடத்தில் விக்ரமனும், மூன்றாவது இடத்தில் சிவினும் இடம் பெற்றனர். இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 6ல் கலந்து கொண்ட ஆண்கள் போட்டியாளர் குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

M.G.R புகைப்படத்தை நெஞ்சில் பச்சை குத்திய விஷால்.., தீயாய் பரவும் புகைப்படம்!!!

அதாவது பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த அசிம், அமுதவாணன் , ஏடிகே, அசல் மற்றும் ராம் ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது எடுத்த புகைப்படத்தை ராக் பாடகர் ஏடிகே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதற்கு கேப்ஷனாக எங்களின் நிஜ வாழ்க்கை எங்களுக்கு முக்கியமானது. பிக்பாஸ் வீட்டில் வெளியே வந்த நாங்கள் நிஜ வாழ்க்கையை வாழ தொடங்கியுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here