டெஸ்ட் அணியில் இடம் பிடித்த ரிஷப் பண்ட்…, ஒரே ஓர் இந்தியர் இவர் தானா??

0
டெஸ்ட் அணியில் இடம் பிடித்த ரிஷப் பண்ட்..., ஒரே ஓர் இந்தியர் இவர் தானா??
டெஸ்ட் அணியில் இடம் பிடித்த ரிஷப் பண்ட்..., ஒரே ஓர் இந்தியர் இவர் தானா??

ஐசிசிக்கான சிறந்த டெஸ்ட் அணியில் இந்தியா சார்பாக ரிஷப் பண்ட் மட்டுமே இடம் பிடித்துள்ளார்.

ஐசிசி டெஸ்ட் அணி:

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட், சமீபத்தில் பயங்கரமான கார் விபத்துக்கு உள்ளாகி இருந்தார். உடலில் பலத்த காயம் அடைந்த இவருக்கு மூன்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு, உடல் நிலையில் முன்னேற்றம் அடைந்து வருகிறார். இவர், பூரணமாக குணமடைந்து இந்திய அணிக்கு திரும்ப சில மாதங்கள் ஆகும் என்பதால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபியை இவர் இழந்துள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

கடந்த ஆண்டில், 7 டெஸ்ட் போட்டிகளில் 2 சதம், 4 அரைசதம் உள்ளிட்ட 680 ரன்களை குவித்துள்ளார் இவர், தற்போது ஐசிசியின் சிறந்த டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ளார். ஐசிசி டெஸ்ட் அணியில் இடம் பெற்ற ஒரே ஓர் இந்திய வீரரும் இவர் தான். இந்த ஐசிசி டெஸ்ட் அணியை இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

IND vs NZ 3rd ODI: 16 மாதத்திற்கு பிறகு சதம் விளாசிய ரோஹித் சர்மா!!

ஐசிசி டெஸ்ட் அணி:

பென் ஸ்டோக்ஸ் (சி) (இங்கிலாந்து), உஸ்மான் கவாஜா (ஆஸ்திரேலியா), கிரேக் பிராத்வைட் (வெஸ்ட் இண்டீஸ்), மார்னஸ் லாபுசாக்னே (ஆஸ்திரேலியா), பாபர் அசாம் (பாகிஸ்தான்), ஜானி பேர்ஸ்டோ (இங்கிலாந்து), ரிஷப் பந்த் (இந்தியா), பாட் கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா), ககிசோ ரபாடா (தென்னாப்பிரிக்கா), நாதன் லியான் (ஆஸ்திரேலியா), ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கிலாந்து)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here