ஆரம்பிக்கலாமா? வந்தது ‘பிக் பாஸ்’ சீசன் 7 அப்டேட்…

0
ஆரம்பிக்கலாமா? வந்தது 'பிக் பாஸ்' சீசன் 7 அப்டேட்...
ஆரம்பிக்கலாமா? வந்தது 'பிக் பாஸ்' சீசன் 7 அப்டேட்...

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோ இதுவரை 6 சீசன்களை வெற்றிகரமாகக் கடந்துள்ளது. சுமார் 15க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்ட ‘பிக் பாஸ்’ சீசன் 6 நிகழ்ச்சியில் பிரபல சின்னத்திரை நடிகர் அஸீம் வெற்றி பெற்றார். இதையடுத்து ‘பிக் பாஸ்’ சீசன் 7 நிகழ்ச்சி எப்போது துவங்கும், அதில் யாரெல்லாம் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக ‘பிக் பாஸ்’ சீசன் 7 நிகழ்ச்சி விரைவில் துவங்க இருப்பதாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான டீசரில், ‘பிக் பாஸ்’ சீசன் 7க்கான லோகோ உடன் கமல்ஹாசன் ‘I will be watching’ என்ற வசனத்தை சைகையில் செய்து காட்டும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்த டீசர் தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here