சொன்ன சொல்லை நிறைவேற்றிய அசீம்.., வெற்றி பெற்ற பணத்தை இவங்களுக்கு தான் கொடுக்க போறாராம்!!

0
சொன்ன சொல்லை நிறைவேற்றிய அசீம்.., வெற்றி பெற்ற பணத்தை இவங்களுக்கு தான் கொடுக்க போறாராம்!!
சொன்ன சொல்லை நிறைவேற்றிய அசீம்.., வெற்றி பெற்ற பணத்தை இவங்களுக்கு தான் கொடுக்க போறாராம்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6 பைனல் கடந்த வாரம் கோலாகலமாக நடைபெற்றது. பிக்பாஸின் கடைசி வாரத்தில் அசிம், விக்ரமன் மற்றும் சிவின் இருந்த நிலையில், சின்னத்திரை நடிகர் அசிம் டைட்டிலை அடித்து சென்றார். அதுமட்டுமின்றி டைட்டில் கோப்பையுடன் சேர்த்து 50 லட்சம் பரிசுத் தொகை மற்றும் பிக்பாஸ் வீட்டு இருப்பு தொகையும் வாங்கியுள்ளார். இந்த நிலையில் அவரை பைனல் வரை கொண்டு வந்த மக்களுக்கு நன்றி கூறும் விதமாக, தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதில் அவர் பேசியதாவது, உலகெங்கும் இருக்கும் என்னுடைய தமிழ் நெஞ்சங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள். என்னை 16 வாரங்கள் ஹவுஸ் மேட்ஸ் நாமினேட் செய்தார்கள். ஆனால் இப்போது அதெல்லாம் உடைச்சு கண்டிப்பா பைனல் போவேன் என்று நான் சொன்ன வார்த்தைக்கு உயிர் கொடுத்தது நீங்கதான். அதுமட்டுமன்றி பல்வேறு தளங்களில் உங்கள் ஆதரவு வருவதைக் கண்டு நான் திகைத்து நிற்கிறேன். மேலும் எனக்கு ஆதரவாக சோசியல் மீடியாவில் பலரும் சப்போர்ட் செஞ்சுருக்காங்க. அவங்களுக்கு நான் என்ன கைம்மாறு பண்ண போறேன்னு தெரியல.

மலையாள படத்தில் கமிட்டான கமல்.., இந்தியன் 2 படப்பிடிப்பை ஓரங்கட்டிய சோகம்.., கடைசில இப்படி ஆகிடுச்சே!!

மேலும் பிக்பாஸ் சீசன் 6ல் டைட்டில் அடித்து வெற்றி பெற்றால் நான் வாங்கும் 50 லட்சத்தில் பாதி கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நன்கொடையாக கொடுப்பேன் என்று வாக்குறுதி கொடுத்திருந்தேன். தற்போது நான் வெற்றியாளராக உங்கள் முன்பு நிற்கிறேன். எனவே கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் படிப்புக்காக கொடுக்க இருக்கிறேன். அதனை என்னுடைய இணையத்தில் பதிவிடுவேன் என்று பேசியுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by MOHAMED AZEEM (@actor_azeem)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here