இதை நான் உங்ககிட்ட இருந்து எதிர்பார்க்கல.., வெளியே வந்தது நல்லது தான்.., மகேஸ்வரி ஒபன் டாக்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. நினைத்ததை விட ஒரு போட்டியாளர்கள் டஃப் கொடுத்து வருகின்றனர். இதுவரை ஜி.பி.முத்து, அசல் கோளாறு, ஷாந்தி மாஸ்டர், ஷெரினா, மகேஸ்வரி போன்றோர் வெளியேறியுள்ளனர்.

ஒவ்வொரு வாரமும் கமல் பலருக்கும் சரியான டோஸ் கொடுத்து வருகிறார். கடந்த வாரம் தனலட்சுமியின் உண்மை முகம் தெரிய வர அதற்கு கமல் அட்வைஸ் கொடுக்க இந்த வாரத்தில் சற்று அடங்கி போயுள்ளார். மேலும் நான் சொல்வது தான் சரி என்று பலரிடம் சண்டை போட்டு கொண்டிருந்த மகேஸ்வரி வீட்டை விட்டே வெளியேறி விட்டார். இந்நிலையில் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது நான் வீட்டை விட்டு வெளியே வந்தது எனக்கு ரொம்ப சந்தோசம் தான். நான் பிக் பாஸ் வீட்டில் நேர்மையா தான் விளையாடினேன். எனக்கு வெளியே இவளோ சப்போர்ட் இருக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை என்று கூறியுள்ளார். உங்க கெரியர் அடுத்த லெவெலுக்கு போக எங்களோட வாழ்த்துக்கள் என்று ரசிகர்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here