மொத ஃபிட்னஸ மெயின்டன் பண்ணுங்க…, ரோஹித்துக்கு பாகிஸ்தான் வீரர் அட்வைஸ்!!

0
மொத ஃபிட்னஸ மெயின்டன் பண்ணுங்க..., ரோஹித்துக்கு பாகிஸ்தான் வீரர் அட்வைஸ்!!
மொத ஃபிட்னஸ மெயின்டன் பண்ணுங்க..., ரோஹித்துக்கு பாகிஸ்தான் வீரர் அட்வைஸ்!!

டி20 உலக கோப்பை தொடரில் ரோஹித் சர்மாவின் பார்ம் மோசமாக இருந்ததையடுத்து, பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் அட்வைஸ் ஒன்றை வழங்கியுள்ளார்.

ரோஹித் சர்மா:

டி20 உலக கோப்பையில் இந்திய அணி அரையிறுதியுடன் திரும்பியதையடுத்து, ரோஹித் சர்மா கேப்டன்சி மீது அதிக விமர்சனங்கள் வந்திருந்தன. மேலும், இவர் சமீபத்தில் முடிவடைந்த டி20 உலக கோப்பையில் இவர் 6 போட்டிகளில் விளையாடி 116 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இதனால், இவரது பார்ம் குறித்தும் கேள்விகள் வர தொடங்கின.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் ரோஹித் சர்மாவுக்கு அட்வைஸ் ஒன்றை அளித்துள்ளார். முதலில், ரோஹித் சர்மாவை சிறந்த வீரர் என்று புகழ்ந்து கூறிய சல்மான் பட், இப்போது அவரை மைதானத்தில், மெதுவாகவும் மந்தமாகவும் திகழ்ந்து வருகிறார் என்று தெரிவித்துள்ளார். இதனால், இவர் தனது உடற்தகுதியை கட்டுக்கோப்பாக (ஃபிட்னஸாக) வைத்துக்கொள்ள வேண்டும் என்று அட்வைஸ் வழங்கியுள்ளார்.

பிரைம் டைம்  சீரியலில்  என்ட்ரி கொடுக்கும்  ஹிட்  சீரியல்  நடிகை.., அப்போ டிஆர்பி  ரேட்டிங்  எகிற போகுது!!

இதனை தொடர்ந்து, ஒரு தொடரில் மோசமாக விளையாடி காரணத்தால் ரோஹித் சர்மா மற்றும் கே எல் ராகுலை தொடக்கத்தில் இருந்து மாற்ற கூடாது என்று கூறியுள்ளார். மேலும், மிடில் ஆர்டரில் களமிறங்கி சூர்யகுமார் அணியின் ஸ்கோர் உயர்வதற்கு முக்கிய பங்கு வகிக்கிறார் என்று பட் புகழ்ந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here