இதை எதிர்பார்கலையே.., இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் இவர் தான்?

0
தற்போது விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 கிட்டத்தட்ட 60 நாட்களை கடந்து பைனலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வார இறுதியிலும் உலக நாயகன் வந்து அந்த வாரம் நடந்ததை பற்றி பேசி போட்டியாளர்களுக்கு டோஸ் கொடுப்பார். அந்த வகையில் இன்று கமல் என்ன பேச போகிறார் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அதுமட்டுமின்றி இந்த வாரம் யார் வெளியேற போகிறார் என்று கேள்வியும் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்நிலையில் இது குறித்து முக்கியமான தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. அதாவது இந்த வாரம் நாமினேஷனில் ஜோவிகா, விசித்திரா, பூர்ணிமா, சரவணன் விக்ரம், மணி, ரவீனா, தினேஷ், மாயா ஆகியோர் இருக்கும் நிலையில் இந்த வாரம் குறைந்த வாக்குகளை பெற்ற ஜோவிகா அல்லது விக்ரம் வெளியேற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here