TNPSC குரூப் 4 தேர்வுக்கான கல்வி தகுதியில் மாற்றம்?? உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!!

0
TNPSC குரூப் 4 தேர்வுக்கான கல்வி தகுதியில் மாற்றம்?? உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!!
தமிழக அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை TNPSC தேர்வாணையமானது போட்டி தேர்வுகளின் அடிப்படையில் நிரப்பு வருகிறது. அந்த வகையில், கடந்த 2020 ஆம் ஆண்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் 135 சமையல்காரர்கள் பணி நியமனத்திற்காக தேர்வு அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதற்கு, கல்வித்தகுதியாக 8ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 10 ஆம் வகுப்பு தோல்வி அடைந்திருக்க வேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஆனால், 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் உயர் கல்வி படித்தவர்கள் இந்த பதவிக்கு 2021ல் தேர்வாகி சுமார் ஒரு வருட காலம் பணி செய்துள்ளனர்.
இதையடுத்து, உரிய விசாரணைக்கு பிறகு கடந்த 2022 ஆம் ஆண்டு இவர்களை பணி நீக்கம் செய்துள்ளனர். இது தொடர்பான வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் வந்துள்ளது. இதற்கு நீதிபதிகள், பணிக்கான கல்வி தகுதி விதிகளை மீறி அதிக வயதுடையவர்களை பணி நியமனம் செய்தது சட்டவிரோதம் ஆகும். இன்றைய காலகட்டத்தில் அதிக கல்வித்தகுதி வைத்துள்ளவர்கள் அடிப்படை பதவிக்கு விண்ணப்பித்து தேர்வாகி வருகின்றனர். இதனால், குரூப்-4 பணிக்கு ஏற்ப குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கல்வித் தகுதியை நிர்ணயித்து விதிகளில் திருத்தம் செய்வதற்கு தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

 

TNPSC COURSE PACK, BOOK MATERIALS & TEST PACK குறைந்த விலையில் பெற கீழே பூர்த்தி செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here