தமிழகத்தில் இந்த மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு அதிர்ச்சி., காலாண்டு தேர்வு முடிவால் கலெக்டர் அதிரடி!!!

0

தமிழகத்தில் அரசு பள்ளியில் பயிலும் பொதுத்தேர்வு மாணவர்களின் நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் அண்மையில் நடைபெற்ற காலாண்டு தேர்வில் மதுரை மாவட்டத்தில் மதிப்பெண் மற்றும் தேர்ச்சி விகிதம் குறைந்து உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது மாநில அளவில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் 20 வது இடத்திலும், பிளஸ் 2 மாணவர்கள் 18 வது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

இதனையறிந்த மாவட்ட ஆட்சியர்,  சி.இ.ஓ., கார்த்திகா மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் ஆய்வுக் கூட்டம் ஏற்பாடு செய்து இருந்தார். இதில் “வழக்கம் போல் தேர்ச்சி விகிதத்திலும், மதிப்பெண் விகிதத்திலும் முதல் 3 இடத்திற்குள் வர வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் என்னிடம் கூறுங்கள். குறிப்பாக ஓரளவு படிக்கும் மாணவர்களுக்கு தனியாக ஆசிரியர் நியமித்து இழந்த பெருமையை மதுரை மீட்க வேண்டும்.” என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

TNPSC குரூப் 4 தேர்வுக்கான கல்வி தகுதியில் மாற்றம்?? உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here