ரவுடியா நீ? அசீமை ரவுண்டு கட்டிய அமுதவாணன், விக்ரமன் – என்னங்க நடக்குது வீட்டுக்குள்ள?

0
ரவுடியா நீ? அசீமை ரவுண்டு கட்டிய அமுதவாணன், விக்ரமன் - என்னங்க நடக்குது வீட்டுக்குள்ள?
ரவுடியா நீ? அசீமை ரவுண்டு கட்டிய அமுதவாணன், விக்ரமன் - என்னங்க நடக்குது வீட்டுக்குள்ள?

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், அசீம் பேசிய பேச்சைக் கேட்டு அமுதவாணன் மற்றும் விக்ரமன் டென்ஷன் ஆகி கத்துவது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.

வெளியான ப்ரோமோ :

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், அதிரடியாக வெளியான முதல் ப்ரோமோவில், விக்ரமன் பேசியதை கேட்டு தனம் கொந்தளித்தார். தனம் கதறி கதறி அழுது கொண்டிருக்கும் போது, விக்ரமன் அதைப் பார்த்து குலுங்கி குலுங்கி சிரித்து கொண்டிருந்தார். அந்த வகையில் தற்போது 2வது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதன்படி, பழங்குடியினராக இருக்கும் அசீமுடன், ஏலியனாக இருக்கும் அமுதவாணன் சண்டை போடுகிறார். வெட்கமே இல்லாமல் நீங்கள் விளையாடுகிறீர்கள்? என அமுதவாணனை அசீம் சொல்கிறார். இதை, நீங்க எப்படி சொல்லலாம், வீட்டில் உள்ள எல்லோரிடமும் மிகவும் கேவலமாக நடந்து கொள்கிறீர்கள் என அமுதவாணன் பதிலுக்கு பதில் சண்டை போடுகிறார்.

பிரேம்ஜிக்கு யுவன் செஞ்ச அந்த காரியம்.., அவரே வெளியிட்ட பதிவு.., வெளியான புகைப்படம்!

இதனைத் தொடர்ந்து விக்ரமன், நேற்று அப்படித்தான், யாராவது என்னை தடுக்க வந்தால் கண்டிப்பா அடிப்பேன் என்று சொல்கிறீர்கள். நீங்க என்ன ரவுடித்தனம் பண்றீங்களா? நீங்க ரவுடியா? என கொந்தளிக்கிறார். இது குறித்த பரபரப்பான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here