பிக் பாஸ் சீசன் 5 பற்றி வெளிவந்த சுவாரசிய தகவல் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

0
bigg boss

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் எப்பொழுது தொடங்கும் என மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் நிலையில் தற்போது நிகழ்ச்சி பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் 5

பிக் பாஸ் விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்தது. பிக் பாஸ் என்றால் எப்படிப்பட்ட நிகழ்ச்சி என்றே தெரியாமல் பார்க்க ஆரம்பித்து தற்போது மக்களின் விருப்பமான நிகழ்ச்சியாக வளர்ந்துள்ளது. என்னதான் பிக் பாஸ் மொக்கை ஷோ என்று சொன்னாலும் யாரும் அதனை பார்க்க தவறியது கிடையாது.

ஏனெனில் அதில் நமது கதாபாத்திரமும் கலந்து தான் ஏ இருக்கும். ஒரு நாளில் நாம் என்னென்ன செய்கிறோம் என்பதை தெளிவாக எடுத்துரைக்கும். சிலரை பார்த்து கண்டிப்பாக இப்படி இருக்க கூடாது என்று கற்றுக்கொடுத்ததும் பிக் பாஸ் நிகழ்ச்சி தான். இப்படி பலரின் பேவரைட் ஷோவாக இந்த பிக் பாஸ் இருந்து வருகிறது.

கடந்த சீசன் ஒரு மாறுபட்ட விதமாக அக்டோபர் மாதத்தில் தொடங்கப்பட்டது. மேலும் இந்த 5வது சீசன் ஜூன் மாதத்தில் தொடங்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால் இந்த வருடமும் லாக்டவுன் போடப்பட்டதால் இந்த வருடமும் அக்டோபர் மாதம் தான் தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இதில் கமல் தான் கலந்துகொள்ளவுள்ளார். ஏற்கனவே வாரத்தின் இறுதி நாளில் மட்டும் வரும் கமல் 3 கோடி வாங்குவாராம். தற்போது இந்த சீசனில் சம்பளத்தை ஏற்றியுள்ளாராம். சிம்பு தான் கலந்துகொள்ளவுள்ளார் என்று பலரும் கூறிவந்த நிலையில் அது வெறும் வதந்தி தான் என்று கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here