‘ஏனென்றால் காதல் என்பேன்’ – வெளியான கொஞ்ச நேரத்தில் இவ்ளோ பேர் பாத்துட்டாங்களா???

0

தன்னுடைய க்யூட்டான அழகினால் பார்ப்பவர்களை ரசிக்க வைத்த பவித்ரா; ‘ஏனென்றால் காதல் என்பேன்’ குறும்படத்தில் நடித்துள்ளார். தற்போது வெளியான அந்த படத்தை ஒரு மணிநேரத்தில் 20000 பேர் பார்த்துவிட்டனர்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

‘ஏனென்றால் காதல் என்பேன்’

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக இளைஞர்களின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்து இருக்கும்; பவித்ரா லட்சுமியை ரசிக்காத ரசிகர்களே இல்லை. நாளுக்குநாள் இவருக்குப் பெரும் ரசிகர்கள் பட்டாளம் பெருகி வருகின்றனர்.

குக் வித் கோமாளிக்கு அடுத்து பவித்ரா ‘ஏனென்றால் காதல் என்பேன்’ என்ற படத்தில் நடித்தார். இந்தக் குறும்படத்தை சில்வர் ஃபாக்ஸ் ஸ்டூடியோஸ் தயாரித்திருக்கிறது. கிளிக்ஸ் அண்ட் ரஷ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இணை தயாரிப்புப் பணியை மேற்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் நாயகனாக விஜய் தங்கையன் நடித்துள்ளார்.

காதலை கதைக் களமாகக் கொண்டு உருவாக்கபட்டுள்ளது ‘ஏனென்றால் காதல் என்பேன்’ என்ற குறும்படம். இந்த ஊரடங்கில் யூடியூப் இளைஞர்களின் ஆர்வத்தை பெறும் நோக்கில் ‘ஏனென்றால் காதல் என்பேன்’ குறும்படம் யூடியூபில் வெளியாகியுள்ளது. இது வெளியான ஒரு மணி நேரத்தில் இருபதாயிரம் பேர் பார்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here