பிக்பாஸ் 6 : போட்டு வையுங்க பா ஒரு ஆறு சீட்ட., இவங்களெல்லாம் வரபோறது கன்பார்ம்!!

0
பிக்பாஸ் 6 : போட்டு வையுங்க பா ஒரு ஆறு சீட்ட., இவங்களெல்லாம் வரபோறது கன்பார்ம்!!
பிக்பாஸ் 6 : போட்டு வையுங்க பா ஒரு ஆறு சீட்ட., இவங்களெல்லாம் வரபோறது கன்பார்ம்!!

விரைவில் ஆரம்பமாக இருக்கும் பிக்பாஸ் சீசன் 6 ல் கிட்டத்தட்ட ஆறு பிரபலங்கள் கலந்து கொள்வது உறுதி ஆகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6:

கமல்ஹாசன் தொகுத்து வழங்க பிக் பாஸ் சீசன் 6 இந்த வாரம் 9 ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பம் ஆகவுள்ளது. இதில் கலந்துகொள்ளவிருக்கும் போட்டியாளர்கள் குறித்து தொடர்ந்து பல செய்திகள் வெளிவந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில், முதல் முறையாக எந்த ஒரு பிக் பாஸ் சீசனிலும் நடக்காத விஷயம் இந்த சீசனில் நடக்க இருக்கிறது. அது என்னவென்றால் பிக் பாஸ் சீசன் 6 ல் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொள்ள போவதாக கூறப்படுகிறது.

இதில் பொதுமக்களும் கலந்து கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலமான ரட்சிதா மகாலட்சுமி, மைனா நந்தினி ஆகியோர் கலந்து கொள்ள இருக்கின்றனர். இது தவிர ஜீ தமிழ் சத்யா சீரியல் மூலம் பிரபலமான ஆயிஷாவும் கலந்து கொள்ள இருக்கிறார்.

மேலும் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ரவீந்தரும் இணைய இருக்கிறார். இவர்களுடன் பிரபல தொகுப்பாளினி மகேஸ்வரியும் இந்த நிகழ்ச்சியில் சேர இருப்பது உறுதி ஆகியுள்ளது. இந்த பிரபலங்களுடன் யூடியூப் மூலம் பேமஸ் அடைந்த ஜிபி முத்துவும் கலந்து கொள்ள இருக்கிறார். இந்த லிஸ்ட் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here