மீண்டும் “இந்த நாட்டில்” நிறுத்தப்பட்ட google சேவை.,, இதுதான் காரணமா?

0

கூகுள் நிறுவனம், சீனாவில் அளித்து வரும் சேவைகளை தொடர்ந்து நிறுத்தி வரும் வகையில் மீண்டும் முக்கிய சேவை ஒன்றை தற்போது நிறுத்தி உள்ளது.

கூகுள் சேவை நிறுத்தம்:

இணையதள பயன்பாடு பட்டிதொட்டியெல்லாம் வந்துவிட்ட இன்றைய சூழலில் இணையம் என்றாலே எல்லோருக்கும் தெரிந்த ஓன்று ‘கூகுள்’தான். கூகுளில் கிடைக்காத தகவல்களே கிடையாது என்றே சொல்லலாம். தேடுபொறி சேவையில் கூகுளுக்குப் போட்டியாக எவ்வளவோ நிறுவனங்கள் இருந்தாலும் கூகுளின் சந்தை மதிப்பு மட்டுமே 90 சதவீதம் ஆகும். இது மட்டுமல்லாமல் மற்ற சேவைகளையும் உலகம் முழுவதும் இந்த நிறுவனம் வழங்கி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தமிழக மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு – பள்ளிகள் திறப்பில் அதிரடி மாற்றம்! கல்வித்துறை உத்தரவு!!

இருப்பினும் இந்நிலையில் கூகுள் நிறுவனம், சீனாவில் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சீன மொழிபெயர்ப்பு சேவையை தற்போது நிறுத்தி கொண்டுள்ளது. இது கூகுள் பயனர்கள் மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சேவையை நிறுத்தப்பட்டதற்கான முக்கிய காரணம் என்னவென்றால், கூகுள் கொடுக்கும் சேவைகளை விட சீனாவில் உள்ள Technical experts மிக சிறந்த சேவைகளை வழங்குவதாகவும், கூகுள் சேவைகள் ஊடுருவு செய்யப்படுவதாலும் சிறப்பான சேவையை சீனாவில் கூகுள் நிறுவனத்தால் வழங்க முடியாமல் போனதாக சொல்லப்படுகிறது. சீனாவில் மொழிபெயர்ப்பு சேவைகளில் கூகுள் சேவைகளை விட அந்த நாட்டு ஆப்கள் மாஸ் காட்டி வருவதாகவும் தகவல்கள் கூறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here