‘பார்க்க அழகா இருக்கீங்க, ஆனா சுத்த கலீஜ்’ – சனம் ஷெட்டியை இழிவாக பேசிய சம்யுக்தா!! கொதிப்பில் ரசிகர்கள்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது எதிர்பாராத பல சண்டைகள் ஏற்பட்டுள்ளது. இன்றைய ப்ரோமோவில் பிக் பாஸ் கால் சென்டர் டாஸ்கை கொடுத்து போட்டியாளர்கள் இடையே பிரச்சனைகளை ஏற்படுத்தி இருக்கிறார் என்றே சொல்லலாம். தற்போது மூன்றாவது ப்ரோமோவும் வெளியாகியுள்ளது. அதில் சனம் மற்றும் சம்யுக்தா இடையே வழக்கம் போல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது.

பிக் பாஸ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது பிக் பாஸ் டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளார். அது கால் சென்டர் டாஸ்க். வழக்கம் போல போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிந்து ஒரு அணி கால் சென்டரிலும் மற்றும் அணி கஸ்டமராகவும் இருக்க வேண்டும்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

கால் சென்டர் அணியில் பாலாஜி, சம்யுக்தா, ஆஜித், கேபி, அனிதா மற்றும் ஷிவானி போன்றோர் இடம் பெற்றுள்ளனர். அடுத்து மிச்சம் இருக்கும் நபர்கள் கஸ்டமராக இருப்பர். காலையில் வெளியிட்ட ப்ரோமோவில் பாலாஜிக்கு கால் செய்த அர்ச்சனா பல கேள்விகளை கேட்க பிரச்சனைகளும் உருவானது.

அதற்கடுத்து அர்ச்சனாவும், பாலாஜியும் வாக்குவாதத்தில் ஈடுபட அர்ச்சனா கொதித்தெழுந்து நான் அர்ச்சனா அக்கா இல்லை வெறும் அர்ச்சனா மட்டும் தான் என்று பெரிய ரகளையே ஏற்பட்டது. தற்போது அடுத்த ப்ரோமோவில் சனம் மற்றும் சம்யுக்தா இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதாவது சனம் சம்யுக்தாவிற்கு கால் செய்ய ஆரம்பித்திலேயே கோவமடைகிறார். சனம் நான் கஸ்டமர் என்னிடம் பொறுமையாக தான் பேசணும் என்று கூற அதற்கு சம்யுக்தா சிலர் பார்க்க அழகா இருப்பாங்க ஆன சுத்த கலீஜ் என்று வார்த்தையை விடுகிறார்.

அதற்கு சனம் இப்படி சொல்றவங்க மனசு தான் கலீஜ் ஆக இருக்கும் என்று நெத்தியடியாக பதிலளிக்கிறார். மேலும் சம்யுக்தா தலைவர் பொறுப்பை பற்றி சனம் கேட்க, உனக்கு இவளோ வயிறு எரியும்னு நான் நினைக்கல என்று கூறி இறுதியாக வளர்ப்பு அப்படி என்றும் கூறுகிறார். இந்த ப்ரோமோவை பார்த்து பலரும் சம்யுக்தா மீது கடுப்பில் உள்ளனர். இதனால் இந்த வாரத்தில் சம்யுக்தா கண்டிப்பாக வெளியேற வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here