பிக் பாஸ் 6 : அசீம் செய்யும் அந்த வேலையை, கையில் எடுத்த அமுதவாணன்! இனி யாரும் காப்பாத்த முடியாது?

0
பிக் பாஸ் 6 : அசீம் செய்யும் அந்த வேலையை, கையில் எடுத்த அமுதவாணன்! இனி யாரும் காப்பாத்த முடியாது?
பிக் பாஸ் 6 : அசீம் செய்யும் அந்த வேலையை, கையில் எடுத்த அமுதவாணன்! இனி யாரும் காப்பாத்த முடியாது?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின், இன்றைய தினத்திற்கான இரண்டாம் ப்ரோமோ குயின்சி மற்றும் அமுதவாணன் சண்டையுடன் வெளியாகியுள்ளது.

வெளியான ப்ரோமோ :

பிக் பாஸ் நிகழ்ச்சியில், வீடு சுத்தமாக இல்லை என மொத்த ஹவுஸ் மேட்டுகள் மீதும் வழக்கு போடப்படுகிறது. இது குறித்த வழக்கை விசாரிப்பதற்காக, குயின்சி நீதிபதியாக அமர்கிறார். இது ஒரு புறம் இருக்க அமுதவாணன், முதல் சாட்சியாக நீதிமன்ற சாட்சி கூண்டில் ஏறுகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அவரிடம் வழக்கறிஞராக இருக்கும் ரக்ஷிதா, நீங்கள் சாப்பிட்ட பொருட்களை கழுவாமல் அப்படியே வைத்து விட்டு சென்றிருக்கிறீர்களா? என கேட்கிறார். அதற்கு அமுதவாணன் நான் அப்படி செய்ததில்லை, மணிகண்டன் அப்படி செய்வதை பலமுறை பார்த்திருக்கிறேன் என்கிறார். அதை ஏற்றுக் கொண்ட மணிகண்டன், இனிமேல் நான் அதை திருத்திக் கொள்கிறேன் என்கிறார். அதன் பிறகு, ஏற்பட்ட சலசலப்பு காரணமாக அனைத்து ஹவுஸ் மேட்டுகளும் சிரிக்கின்றனர்.

ஜனார்த்தனன் சதி வலையில் சிக்கிய மீனா.., வீட்டை விட்டே துரத்தி விடும் ஜீவா.., பாண்டியன் ஸ்டோர்ஸ் ட்விஸ்ட்!!

ஆனால் குயின்சி அமுதவாணனை மட்டும் தனியாக எழுந்து போய் அமர சொல்கிறார். இதனால் கடுப்பான அவர் எல்லோரும் தான் சிரிக்கிறாங்க என்ன மட்டும் ஏன் சொல்றீங்க? என கொந்தளிக்கிறார். எப்போதும் தன்னை யாரும் எதுவும் சொல்லி விடக்கூடாது என்பதில் அசீம் தான் கண்ணும் கருத்துமாய் இருப்பார். தற்போது அந்த வழியை அமுதவாணன் பின்பற்றி வருவதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here