தமிழகத்தில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு மைதானம்.., அமைச்சர் மெய்யநாதன் தகவல்!!

0
தமிழகத்தில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு மைதானம்.., அமைச்சர் மெய்யநாதன் தகவல்!!

மதுரையில் ஜல்லிக்கட்டு மைதானம் விரைவில் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் பேட்டி அளித்துள்ளார். இது குறித்த முழு விவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஜல்லிக்கட்டு மைதானம்:

தமிழகம் முழுவதும் தைத்திருநாளை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு நடத்தப்படுவது வழக்கம். அதுவும் மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் பொங்கல் பண்டிகை நாளில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. மேலும் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் ஜல்லிக்கட்டை விளையாட்டு போட்டியாக மாற்றுவதற்கு முக்கிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார். இதை தொடர்ந்து இதுவரை இல்லாத அளவிற்கு, மதுரையில் மிகவும் பிரமாண்டமான ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்பட உள்ளது என்றும் அமைச்சர் கூறியுள்ளார். அதாவது இன்று, புதுக்கோட்டை அரசு ராணியார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை அமைச்சர்கள் ரகுபதி மற்றும் மெய்யநாதன் ஆகியோர் வழங்கினர்.

உங்களுக்கு ஒரு நேரடி சவால் – 20 செகண்ட் எடுத்துக்கோங்க! இதை கண்டுபிடிச்சா நீங்க தான் ஜீனியஸ்!!

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மெய்யநாதன், மதுரையில் பெரிய அளவில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்படும், அதற்கான பணிகளும் தொடங்க உள்ளதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடர்ந்து தமிழகத்தில் வரும் காலங்களில் உலக அளவில் பல்வேறு போட்டிகள் தமிழகத்தில் நடைபெறுவதற்கு முதல்வர் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here