ஆதார் கார்டில் உடனேஇந்த அப்டேட்டை செஞ்சுருங்க.,, இல்லைனா சிக்கல் தான்!!

0
ஆதார் கார்டில் உடனேஇந்த அப்டேட்டை செஞ்சுருங்க.,, இல்லைனா சிக்கல் தான்!!

ஆதார் அட்டை தாரர்கள், ஒவ்வொரு 10 வருடங்களுக்குப் பிறகு, தங்களின் பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்து கொள்ளுமாறு யுஐடிஏஐ கேட்டு கொண்டுள்ளது.

புதிய ரூல்:

இந்திய குடிமகனின் முக்கிய ஆவணமாக ஆதார் அட்டை திகழ்கிறது. இந்த அட்டையில் நபரின் பெயர், முகம், கைரேகை, கண் போன்ற பல தனிப்பட்ட விஷயங்கள் இருக்கும். மேலும் ஆதார் கார்டு அனைத்து அரசு சேவைகள், சலுகை திட்டங்கள் பெறுவதற்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக மாறியுள்ளது. இந்த சூழ்நிலையில் இத்தகைய ஆதார் கார்டை அப்டேட்டுடன் வைத்திருப்பது அவசியம் ஆகும்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

மேலும் அதற்கான ஏற்பாடுகளையும், அரசு செய்துள்ளது. இந்நிலையில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. அறிக்கையின்படி, ஆதார் அட்டைதாரர்கள் அனைவரும் ஒவ்வொரு 10 வருடங்களுக்குப் பிறகு தங்கள் பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளது.

தீவிரமெடுக்கும் வைரஸ் காய்ச்சல்.,, நிரம்பி வழியும் மருத்துவமனைகள்., டாக்டர்ஸ் வெளியிட்ட முக்கிய அறிவுரைகள்!!

மேலும் இந்த புதிய விதியிலிருந்து 70 வயதுக்கு மேற்பட்ட பயனர்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்து உள்ளது. தொடர்ந்து 5 முதல் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பயோமெட்ரிக் டேட்டாக்களை கட்டாயம் அப்டேட் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. . இந்நிலையில் ஆதார் அட்டைதாரர்கள் பலரும் அவர்களின் பயோமெட்ரிக் டேட்டாக்களை அப்டேட் செய்ய தானாக முன் வருவதாக UIDAI தகவல் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here