பிக்பாஸ் வனிதா 3வது திருமணம் – பீட்டர் பாலை கரம் பிடித்தார்..!

0

பிரபல தனியார் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடித்து பிரபலமடைந்த வனிதா இன்று 3வது திருமணம் செய்து கொண்டார். அவர் பீட்டர் பால் என்பவரை கரம் பிடித்தார்.

திருமணம்:

நடிகர் விஜயுடன் சந்திரலேகா படத்தில் நடித்தவர் வனிதா. அதன் பின்னர் படங்களில் அதிகளவில் கவனம் செலுத்தவில்லை. கடைசி வருட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் தனது வத்திக்குச்சி குணத்தால் மக்களிடையே பிரபலமடைந்தார்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

இவருக்கு ஏற்கனவே 2 முறை திருமணம் நடைபெற்று விவாகரத்து ஆகி உள்ளது. மேலும் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் ஜூன் 27ம் தேதி பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக வனிதா அறிவித்து இருந்தார்.

அதன்படி இன்று திருமணம் நடைபெற்றது. கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். தற்போது அவர் திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here