தன் கணவர் பற்றி ஒரு வழியாக வாயை திறந்த பிரியங்கா – அவரே கூறிய அதிரடி பதில்!!

0

பிக் பாஸ் வீட்டில் ஒரு முறை கூட தனது கணவரை குறித்து பிரியங்கா பேசாததால் இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனரா என்று பல செய்திகள் இணையத்தில் வலம் வந்து கொண்டிருந்தன. இந்த நிலையில் பிரியங்கா முதன் முறையாக தன் கணவரை குறித்து பேசியுள்ளார்.

பிக் பாஸ் பிரியங்கா:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் 5 நிகழ்ச்சி கடந்த வாரம் முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் ராஜு முதல் இடத்தையும், பிரியங்கா இரண்டாம் இடத்தையும் பிடித்தார். பிக் பாஸ் வீட்டில் இருந்த அனைவருமே தங்களது குடும்ப வாழ்க்கை மற்றும் வாழ்க்கையில் இழந்த சோக நிகழ்வு அனைத்தையுமே ரசிகர்களுக்கு தெளிவுபடுத்தி வந்தனர். இதே போல பிரியங்காவும் அடிக்கடி அவரது குடும்ப கதைகளை போட்டியாளர்களுக்கு கூறி வந்தார். ஆனால் இதுவரை கணவரை குறித்து மட்டும் எதுவுமே கூறாமலே இருந்தார்.

இதனால் இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனரோ என வதந்தி பரவிகொண்டிருந்தது. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு ஒரு பேட்டியில் ஏன் உங்களது கணவரை குறித்து எதுவுமே கூறவில்லை என பிரியங்காவிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த பிரியங்கா, “இந்த கேள்வியை நிறைய பேர் கேட்டுவிட்டனர். கண்டிப்பாக எனது கணவரை குறித்து நான் அடுத்து இன்ஸ்டாவில் லைவ் வரும் போது கூறுவேன். இப்போதைக்கு இந்த கேள்வியை யாரும் என்னிடம் கேட்கவேண்டாம்” என கூறியுள்ளார். இந்த பதில் ரசிர்களை மேலும் குழப்பமடைய செய்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here