பிக் பாஸ் 2.0 வெர்சன் – விஜய் டிவியில் அறிமுகமாகும் புதிய நிகழ்ச்சி!!

0

விஜய் தொலைக்காட்சியில் தற்போது புதிதாகவும் அதே போல் புதுமையான ஒரு ஷோவை நடத்த இருக்கின்றனராம். அது குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

“பிக் பாஸ் ஜோடி” நிகழ்ச்சி

மக்களுக்கு பிடித்த வகையில் பல நிகழ்ச்சிகளை வழங்குவதில் விஜய் தொலைக்காட்சிக்கு ஈடு இணையே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வருகின்றனர். இப்படியாக இருக்க, தற்போது புதுமையான ஒரு நிகழ்ச்சியினை அறிமுகப்படுத்த இருக்கின்றனர். அந்த நிகழ்ச்சிக்கு “பிக் பாஸ் ஜோடி” என்ற பெயர் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

சித்ராவின் 2.0 வெர்சன் – பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலத்தின் போட்டோஷூட்டால் கண்கலங்கிய ரசிகர்கள்!!

பிக் பாஸ் போட்டிகளில் பங்கேற்றவர்களை ஜோடிகளாக இணைத்து ஒரு புதுமையான நிகழ்ச்சியாக வழங்க இருக்கின்றனராம். இதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாகம் அடைந்துள்ளனர். இதனை அடுத்து இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் முதல் சீசனில் இருந்து நான்காம் சீசன் வரை பங்கேற்ற போட்டியாளர்கள் அனைவரும் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த நிகழ்ச்சி குறித்து தற்போது விஜய் தொலைக்காட்சி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து இந்த நிகழ்ச்சி குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here