ரைசாவிற்கு ஏற்பட்ட இந்த நிலைக்கு காரணம் யார்?? வைரலாகும் வீடியோ!!

0

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ரைசா தற்போது தான் மேற்கொண்ட சரும டிரிட்மென்ட் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார். அது குறித்து தற்போது அவருக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் தன் தரப்பு கருத்தினை தற்போது வெளியிட்டுள்ளார்.

நடிகை ரைசா வில்சன்

தமிழ் சினிமாவில் ஒரு மாடல் அழகியாக அறிமுகமாகி ஒரு சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெயர் பெற்றவர் தான், நடிகை ரைசா வில்சன். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு முன்னணி நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக இருந்துள்ளார். ஆனால், மாடலிங் துறையின் மேல் இருந்த ஆர்வத்தால் இவர் பல போட்டிகளில் பங்கு பெற்றுள்ளார்.

#SRHvsPBKS ஐபிஎல் போட்டி – சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் ஐதராபாத்! திணறும் பஞ்சாப்!!

அதே போல் இவர் பல மாடலிங் போட்டிகளில் பங்கேற்று பல விருதுகளையும் வென்றுள்ளாராம். இவர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தது, பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக தான். இந்த நிகழ்ச்சியில் 63 நாட்கள் அந்த வீட்டில் இருந்த ஒரே பெண் இவர் தான். இப்படியாக இருக்க, இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஒரு பதிவினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அதில் தான் ஒரு சரும டிரிட்மென்ட் மேற்கொண்டதாகவும், அதில் அவர்கள் தான் வேண்டாம் என்று கூறிய ஒரு டிரிட்மெண்டை வற்புறுத்தி செய்ய வைத்ததாகவும், இதனால் தனக்கு பாதிப்பு ஏற்பட்டு விட்டது என்று கூறினார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாக பரவியது. இப்படியாக இருக்க, இது குறித்து ரைசாவிற்கு டிரிட்மென்ட் பார்த்த மருத்துவர் கூறியதாவது ரைசா அந்த டிரிட்மெண்டை செய்ய சொன்னதாகவும், இதனை செய்து விட்டு தற்போது இப்படி சொல்கிறார் என்று தெரிவித்துள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதே போல் தற்போது தான் கொடுத்த பணத்தினை கொடுக்குமாறு மிரட்ட வேறு செய்கிறார் என்று தெரிவித்துள்ளனர். இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here