டவுசர் உடன் ஆங்கில பாடலுக்கு செம ஆட்டம் போட்ட கேப்ரில்லா…!வெளியான வைரல் வீடியோ!!!

0

விஜய் டிவி என்றாலே பிரம்மாண்டம் தான் அதில் ஏதேனும் ஒரு நிகழ்ச்சியில் வந்தாலே போதும் மக்கள் மனதில் எப்படியும் இடம் கிடைத்துவிடும் என்றே சொல்லலாம். அந்த வகையில் வந்தவர் தான் நம்ம குட்டி பொண்ணு கேப்ரில்லா. சோசியல் மீடியாவில் பிஸியாக இருக்கும் கேப்ரில்லா அவ்வப்போது தனது  புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்து விடுகிறார்.

கேப்ரில்லா தன்னுடைய சிறு வயதிலேயே விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ஜோடி நம்பர் ஒன் ஜூனியர்ஸ்’  என்ற  நடன நிகழ்ச்சி மூலம் தனது சின்னத்திரை வாழ்க்கை பயணத்தை தொடங்கியவர். அதில் தன்னுடைய நடன திறமையால் வெற்றியும் பெற்றார். ‘3’ திரைப்படம் மூலம் தமிழ் திரை உலகத்தில் அடிவைத்தார். அந்த படத்தில் காது மற்றும் வாய் பேச இயலாத சுமி என்ற ஒரு சிறு பெண் கதாபாத்திரத்தில் சுருதிஹாசனின் தங்கையாக வலம் வருவார். அதன் பிறகு விஜய் டிவியின் ‘7C’ என்ற சீரியலில் நடித்து உள்ளார். தொடர்ந்து,  ‘ஜோடி நம்பர் ஒன்னு சீசன் -6ல்’ பங்கேற்று அதிலும் வெற்றி வாகை சூடினார்.

இவைகளை தொடர்ந்து ‘பிக் பாஸ் சீசன் -4’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கும் ஆடல் பாடல் என தன் திறமையை காட்டி வந்தார். மேலும் பாசம், பிரிவு, சண்டை சர்ச்சை என அனைத்தும் கலந்த கலவையாக அந்த சீனில் இவர் பங்கு இருந்தது. அந்த நிகழ்ச்சியில் அவர் ஒரு குட்டி பெண்ணாக சுற்றி திரிந்தார். மேலும் அவர் அந்த நிகழ்ச்சியில்  புத்திசாலித்தனமாக இடையில் கிடைக்க பெற்ற பண வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு தானாக வெளியேறினார்.

அதன் பிறகு, தற்போது அவர் ‘பிக் பாஸ் ஜோடிகள்’ என்ற நடன நிகழ்ச்சியிலும் களம் இறங்கி உள்ளார். மேலும் இது போன்ற பல  நிகழ்ச்சி மூலம் அவருக்கு ஒரு ரசிகர்கள் கூட்டம் சேர்ந்தது. அதன் மூலம் அவ்வப்போது அவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு அவரின் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இதனால் அவர்  தனது புகைப்படங்களில் சில கவர்ச்சியையும் வெளிப்படுத்தினார். தற்போது அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு உள்ள வீடியோவில் வெள்ளை நிற டாப் மற்றும் டவுசர் அணிந்து கொண்டு ஒரு ஆங்கில பாடலுக்கு  மிக அழகாக நடனம் ஆடி உள்ளார். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Gaby (@gabriellacharlton_)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here