பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமலுக்கு பதிலாக இந்த ஹீரோவா? – அப்போ அடுத்த வாரம் ரணகளம் தான்!!

0
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமலுக்கு பதிலாக இந்த ஹீரோவா? - அப்போ அடுத்த வாரம் ரணகளம் தான்!!

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து கமல் பணிச்சுமை காரணமாக விலகியதால் அவருக்கு பதிலாக யார் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்கள் என பலரும் பேசி கொண்டிருந்த சமயத்தில் தற்போது ஒரு செய்தி வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி:

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொடர்ந்து பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேரமும் நேரலையாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 14 போட்டியாளர்கள் தான் இந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டுள்ளனர். கடந்த 5 சீசனையும் கமல்ஹாசன் தான் வெற்றிகரமாக தொகுத்து வழங்கி வந்தார். தற்போதும் மூன்று வாரங்களாக தொடர்ந்து பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வந்த கமல் படப்பிடிப்பு மற்றும் அரசியல் பணிகளுக்காக இந்நிகழ்ச்சியில் இருந்து விலகியுள்ளார்.

கமலுக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என எதிர்பார்த்த சமயத்தில் தற்போது ஒரு செய்தி வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. அதாவது கமலுக்கு பதிலாக பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்கவுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. சிம்பு பங்கேற்கும் புரோமோ ஷூட்டிங் நாளை நடைபெறவுள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது. சிம்புவை பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் காணவுள்ள மகிழ்ச்சியில் ரசிகர்கள் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here