விக்கெட் மட்டுமில்ல.. ரசிகர்களையும் வீழ்த்திடிங்க – T20 தொடரில் புவனேஷ் குமார் படைத்த புதிய சாதனை!

0
விக்கெட்ட மட்டும்மில்ல.. ரசிகர்களையும் வீழ்த்திடிங்க - T20 தொடரில் புவனேஷ் குமார் படைத்த புதிய சாதனை!
விக்கெட்ட மட்டும்மில்ல.. ரசிகர்களையும் வீழ்த்திடிங்க - T20 தொடரில் புவனேஷ் குமார் படைத்த புதிய சாதனை!

புவனேஷ்வர் குமார் ஆசிய கோப்பை தொடரில் சிறப்பாக பந்து வீசியதன் மூலம் டி20 போட்டிகளில் மிகப்பெரும் சாதனை படைத்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்!!

ஆசிய கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ் சர்வதேச T20 போட்டிகளில் சாதனை படைத்துள்ளார். அதாவது இந்திய அணி நிர்ணயித்த இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. அதாவது புவனேஷ் வீசிய முதல் ஓவரிலேயே ஆப்கானிஸ்தான் அணியின் ஓப்பனிங் வீரர்கள் ஹஸ்ராதுல்லா மற்றும் ரஹ்மானுல்லா ஆகிய இருவரும் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனை தொடர்ந்து களமிறங்கிய மற்ற வீரர்களான சிக்கி கரீம் ஜனாத் (2), நஜிபுல்லா ஜாட்ரான் (0), அஸ்மாதுல்லா (1) ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து ஆட்டமிழந்தனர். இந்த ஆட்டத்தில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் புவனேஷ் குமார் சாதனை நிகழ்த்தியுள்ளார். அதாவது தனது பந்துவீச்சின் மூலம் நான்கு ஓவர்கள் வீசி அதில் வெறும் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தலான சாதனை படைத்துள்ளார்.

T20 வரலாற்றில் இது போன்ற சாதனை நிகழ்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சர்வதேச தொடர்களில் ஒரு பந்துவீச்சாளராக புவனேஷ் அதிக முறை தொடர் நாயகன் விருது வென்ற பாஸ்ட் பவுலர் என்ற சாதனையையும் அண்மையில் படைத்தார். இந்த ஆசிய கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் T20 உலகக்கோப்பைக்கான தனது இடத்தையும் தக்க வைத்துக் கொண்டார் இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ் குமார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here