இந்தியா முழுவதும் நாளை மறுநாள் துக்கம் அனுசரிப்பு – பிரிட்டன் ராணி மறைவையடுத்து மத்திய அரசு அறிவிப்பு!!

0
இந்தியா முழுவதும் நாளை மறுநாள் துக்கம் அனுசரிப்பு - பிரிட்டன் ராணி மறைவையடுத்து மத்திய அரசு அறிவிப்பு!!

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவையடுத்து, இந்தியா முழுவதும் வருகிற செப்டம்பர் 11ம் தேதி ஒரு நாள் தூக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசு அறிவிப்பு :

பிரிட்டன் நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத், வயது முதிர்வு காரணமாக தனது 96 வயதில் இன்று உயிரிழந்தார். இவரது மறைவை அடுத்து, நாட்டின் அடுத்த அரசராக சார்லஸ் பதவியேற்க உள்ளார். தற்போது பிரிட்டன் நாட்டின், அரசு முறைப்படி  ராணி மறைவுக்கு 10 நாள் தூக்கம் அனுசரிக்கப்பட உள்ளது. ராணியின் மறைவுக்கு, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இரங்கலை பதிவு செய்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

Queen Elizabeth II was a stalwart of our times: PM Narendra Modi | India News,The Indian Express

இந்தியாவுக்கு 3 முறை வருகை புரிந்துள்ள ராணி எலிசபத்தின் மறைவை அடுத்து, வருகிற செப்டம்பர் 11 ஆம் தேதியான நாளை மறுநாள், இந்தியா முழுவதும் ஒரு நாள் துக்கம் அனுசரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த நாளில், மூவர்ணக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் எனவும், அனைத்து அரசியல் நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும்  மத்திய அரசு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here