FIFA குறித்து பூட்டியா அதிரடி பேட்டி – தடையை நீக்கியது ஏன்..?

0
FIFA குறித்து பூட்டியா அதிரடி பேட்டி - தடையை நீக்கியது ஏன்..?

சர்வதேச கால்பந்து சம்மேளனம் அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் மீதான தடையை நீக்கியது குறித்து கால்பந்து ஜாம்பவான் பாய்ச்சுங் பூட்டியா பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

இந்திய கால்பந்து கூட்டமைப்பு..!

அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பை (AIFF) தற்காலிகமாக ரத்து செய்வதாக சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (ஃபிஃபா FIFA ) அண்மையில் தெரிவித்தது. இதற்கு காரணம் இந்திய கால்பந்து அமைப்பில் 3வது தரப்பினர் தலையிட்டதாலே இந்தியாவுக்கு இந்த நிலைமை ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று FIFA  வெளியிட்ட அறிக்கையில் இந்திய கால்பந்து கூட்டமைப்பிற்கு விதித்த இடைக்கால தடையை நீக்கி உள்ளது. இதனால் மகளிர் கால்பந்து உலக கோப்பை திட்டமிட்டபடி இந்தியாவிலேயே நடத்தப்படும் எனவும் பிஃபா தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து பதவி காலம் முடிந்தும் இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவராக நீடித்து வந்த பிரஃபுல் படேலை அப்பதவியிலிருந்து நீக்கிய உச்சநீதிமன்றம், 3 நபர்களை இந்திய கால்பந்து கூட்டமைப்பிற்கு நியமித்துள்ளது. இந்த சூழ்நிலையில் இந்திய கால்பந்து ஜாம்பவான் பாய்ச்சுங் பூட்டியா, தடையை நீக்கியது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார். இது இந்திய கால்பந்து அமைப்பிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி எனவும் தெரிவித்துள்ளார். மேலும் ஃபிஃபா U17 மகளிர் உலகக்கோப்பை இந்திய வீராங்கனைகள் கலந்து கொள்ள இருப்பதால் உற்சாகமாக உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது கால்பந்து கூட்டமைப்பிற்கு புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் நிர்வாகத்தில் இனி எந்த தவறும் நடக்கலாம் வழிநடத்துவார் என பாய்ச்சுங் பூட்டியா கூறியுள்ளார். இவர் இந்திய கால்பந்து அணிக்காக 100 போட்டிகளில் விளையாடிய முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்நிலையில் AIFF தலைவர் பதவிக்காக, முன்னாள் கோல் கீப்பரான  கல்யாண் சௌபே க்கு எதிராக போட்டியிட உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here