இக்கட்டான சூழலிலும் சத்தியம் செய்த பாரதிராஜா – போராடி நிறைவேற்றியதற்கு நன்றி சொன்ன கமல்!!

0
இக்கட்டான சூழலிலும் சத்தியம் செய்த பாரதிராஜா - போராடி நிறைவேற்றியதற்கு நன்றி சொன்ன கமல்!!
இக்கட்டான சூழலிலும் சத்தியம் செய்த பாரதிராஜா - போராடி நிறைவேற்றியதற்கு நன்றி சொன்ன கமல்!!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான பாரதிராஜா, தனக்கு செய்து கொடுத்த சத்தியத்தை நிறைவேற்றி விட்டதாக உலகநாயகன் கமல் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

கமல் நெகிழ்ச்சி:

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான பாரதிராஜா, உடல் நலக்குறைவு காரணமாக சில தினங்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்கு பின் கடந்த 9ம் தேதி வீடு திரும்பினார். இவரை, அவருடைய இல்லத்திற்கு நேரில் சென்று முதல்வர் ஸ்டாலின் மற்றும் வைரமுத்து ஆகியோர் நலம் விசாரித்தனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இனி வழக்கமான படப்பிடிப்புகளில், பாரதிராஜா கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் சிறுநீரக குழாய் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது சிகிச்சை முடித்து அவர் வீடு திரும்பியுள்ளார். இது குறித்து பதிவிட்ட நடிகர் கமல், கடந்த முறை நீங்கள் மருத்துவமனையில் இருந்தபோது என்னை பார்க்க அனுமதிக்கவில்லை.

விரைவில் சந்திக்கிறேன், என பதில் கொடுத்து என்னை அனுப்பி வைத்தீர்கள். நீங்கள் சொன்ன வாக்கை காப்பாற்றி உள்ளீர்கள். தேனிக்கார நண்பருக்கு இந்த பரமக்குடியானின் வாழ்த்துகள் என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here