ஐயோ.,பிக்பாஸ் இவங்கள ஏன் நீங்க கூப்டீங்க? போச்சு சும்மாவே ஆடுவாங்க! இதுல இது வேறயா?

0
ஐயோ.,பிக்பாஸ் இவங்கள ஏன் நீங்க கூப்டீங்க? போச்சு சும்மாவே ஆடுவாங்க! இதுல இது வேறயா?
ஐயோ.,பிக்பாஸ் இவங்கள ஏன் நீங்க கூப்டீங்க? போச்சு சும்மாவே ஆடுவாங்க! இதுல இது வேறயா?

தனி ரசிகர் பட்டாளத்தை கொண்ட பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 6 ல், இணையத்தை கலக்கி வரும் புதுமண ஜோடி கலந்து கொள்ள போவதாக தகவல் வைரலாகி வருகிறது

வைரலாகும் தகவல்:

விஜய் டிவியில் என்டர்டைன்மென்ட்க்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பப்படும் ஷோக்களில் ஒன்று, ” பிக் பாஸ்”. இதுவரை இந்த ஷோவின் 5 சீசன்கள் முடிந்துள்ளது. இதனால் ரசிகர்கள் எப்போது 6வது சீசன் வரும் என்ற வெயிட்டிங்கில் இருந்தனர். அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக விஜய் டிவி ,பிக் பாஸ் சீசன் 6 க்கான ப்ரோமோகளை தொடர்ந்து வெளியிட்டது. இந்த வகையில் பிக் பாஸ் சீசன் 6, அடுத்த மாதம் 9ம் தேதி பிரமாண்டமாக தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

முந்தைய 5 சீசன்களை விட இந்த சீசன் கொஞ்சம் புது மாதிரியாக இருக்கும் என்று இணையத்தில் செய்திகள் வலம் வருகிறது. மேலும் போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கும் பணிகளும் இறுதிகட்டத்தை நெருங்கி விட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தொகுப்பாளினி டிடி, சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி, ரோஷினி, அர்ச்சனா, தர்ஷா குப்தா, ஸ்ரீ நிதி மற்றும் நடிகை ஷில்பா மஞ்சுநாத், நடிகை மனிஷா யாதவ் ஆகியோர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல போவதாக பேசப்படுகிறது.

இக்கட்டான சூழலிலும் சத்தியம் செய்த பாரதிராஜா – போராடி நிறைவேற்றியதற்கு நன்றி சொன்ன கமல்!!

இந்த வரிசையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்யாணம் செய்து கொண்ட மகாலட்சுமியும், ரவீந்தர் ஜோடி, பிக் பாஸ் 6 வீட்டிற்கு செல்ல போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ட்ரெண்டிங் ஜோடியான மகாலட்சுமி- ரவீந்தர் பிக் பாஸ் வீட்டுக்கு சென்றால் சீசன் 6 ல் சுவாரசியத்துக்கு பஞ்சமே இல்லாமல் மிகவும் தாறுமாறாக இருக்கும் என இணையத்தில் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here