பாக்கியாவை தொடர்ந்து இனியாவிற்கு நடக்க இருக்கும் விபரீதம்.., ராதிகாவின் அம்மா போடும் மாஸ்டர் பிளான்!!

0
பாக்கியாவை தொடர்ந்து இனியாவிற்கு நடக்க இருக்கும் விபரீதம்.., ராதிகாவின் அம்மா போடும் மாஸ்டர் பிளான்!!
பாக்கியாவை தொடர்ந்து இனியாவிற்கு நடக்க இருக்கும் விபரீதம்.., ராதிகாவின் அம்மா போடும் மாஸ்டர் பிளான்!!

கோபிக்கும் ராதிகாவிற்கும் திருமண வேலைகள் தடபுடலாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் கோபி முழுக்க முழுக்க இனியாவை பற்றியே யோசித்துக் கொண்டிருக்கிறார். இதனால் இனியாவையும் கோபியையும் எப்படியாவது பிரித்தே தீர வேண்டுமென ராதிகாவின் அம்மா பிளான் போடுகிறார்.

பாக்கியலட்சுமி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபிக்கும் ராதிகாவிற்கும் இன்னும் சில நாட்களில் திருமணம் நடைபெற இருக்கிறது. இந்த சமயத்தில் கோபி இனியாவை பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார் என ராதிகாவின் அம்மா கடுப்பாகிறார். வீட்டில் திருமண வேலைகளை பற்றி பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில் கூட இனியாவிற்கு நான் இது செய்வேன், இனியா என்னிடம் இது கேட்பாள் என முழுக்க முழுக்க இனியாவை பற்றியே பேசிக் கொண்டிருப்பதால் திருமணத்திற்கு பிறகு இனியாவையும் கோபியையும் பிரித்தே தீரவேண்டும் என ராதிகாவின் அம்மா முடிவு செய்துவிட்டார்.

இதை ராதிகாவிடம் கூறும்போது இனியாவும் என்னுடைய பெண் மாதிரிதான். கண்டிப்பாக திருமணத்திற்குப் பிறகும் கோபி எல்லா உதவிகளையும் இனியாவிற்கு செய்து கொண்டேதான் இருப்பார் என கூறிவிட்டார். ஆனால், எப்படியாவது இருவரையும் பிரித்து தீர வேண்டும் அதுதான் ராதிகாவுக்கும் நல்லது என ராதிகாவின் அம்மா நினைக்கிறார். இந்த சமயத்தில் திருமணத்திற்காக குடும்பத்துடன் டிரஸ் எடுக்க சென்றிருக்கிறார்கள். அங்கும் சென்று இனியாவிற்கு பார்த்துப் பார்த்து டிரஸ் எடுத்து கொண்டிருக்கிறார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனை பார்த்து ராதிகாவின் அம்மா கடுப்பாகிறார். இது ஒருபுறம் இருக்க மறுபுறம் கோபியின் திருமணத்திற்கு தான் சமைக்கப் போகிறோம் என தெரியாமலேயே பாக்கியா தடபுடலாக அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்து கொண்டிருக்கிறார். கோபியின் திருமணத்திற்கு தான் சமைக்கப் போகிறோம் என தெரிந்த பிறகும் கூட இந்த ஆர்டரை பாக்கியா செய்து முடிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here