ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ் – இனி Train-லேயே உங்களுக்கு இலவச உணவு! அரசின் சூப்பர் திட்டம்!!

0
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்

ரயில் பயணிகளுக்கு, இனி ரயில்களிலேயே இலவச உணவு வழங்கும் அதிரடி திட்டம் ஒன்றை, இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது.

ரயில்வே அதிரடி:

இந்தியாவில் மக்கள் அதிகம் பயன்படுத்தும், போக்குவரத்து சேவைகளில் ஒன்று ரயில். பயணிகளின் வசதிக்கு ஏற்ப ப்ரீமியம், சூப்பர் பாஸ்ட், எக்ஸ்பிரஸ் மற்றும் பாசஞ்சர் போன்ற பலவகை ரயில்கள் இந்திய ரயில்வே துறையில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ரயில்வே நிர்வாகம் எவ்வளவு தான் திட்டமிட்டாலும் சில நேரங்களில் ரயில்கள் இயக்கப்படுவதில் காலதாமதம் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.

இவ்வாறு, ஏற்படும் காலதாமதத்தால் பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க ரயில்வே துறை முக்கிய அறிவிப்பு போன்ற வெளியிட்டுள்ளது. அதாவது, பிரீமியம் ரயில்களான ராஜ்தானி, துரந்தோ மற்றும் சதாப்தி ஆகிய ரயில்களில் ஏற்படும் காலதாமதத்தை பொறுத்து, பயணிகளுக்கு இலவசமாக காலை,மதியம் மற்றும் இரவு உணவுகள் வழங்கப்பட உள்ளது.

இந்த ரயில், பெரும்பாலான நிறுத்தங்களில் நின்று செல்வதில்லை என்பதால், அவர்களுக்கு ஏற்படும் உணவு தட்டுப்பாட்டை தவிர்க்க இந்த திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால், இந்த பிரீமியம் ரயில்களில் பயணிக்கும் பயணிகள், விரும்பினால் இலவச உணவு பெற்றுக் கொள்ளலாம் என்பது உறுதியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here