குழந்தை விஷயத்தில் மொத்த பழியையும் ஜெனியின் மீது போடும் ஈஸ்வரி… இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் கதைக்களம்!!!

0

பாக்கியலட்சுமி சீரியல் ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு வெற்றி சீரியலாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த சீரியலில் இன்று, ஜெனிக்கு தான் குழந்தை பெற்று கொள்வதில் இஷ்டம் இல்லை என பாக்கியாவிடம் ஈஸ்வரி சாடுகிறார்.

பாக்கியலட்சுமி சீரியல் 

பாக்கியலட்சுமி சீரியலில் தான் சம்பாதிக்கவில்லை என்ற ஒரு காரணத்தால் ஈஸ்வரி மற்றும் கோபி ஏளனமாக பாக்கியாவை பேசுகின்றனர். மேலும் தானும் இந்த குடும்பத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்து 1000 பேருக்கு சமைக்க வந்து உள்ள சமையல் ஆர்டரை ஏற்று செய்ய முடிவு செய்கிறார் பாக்கியா. இந்நிலையில் இன்று, எழில் மற்றும் அமிர்தா புதிதாக எடுக்கவிருக்கும் படத்தை பற்றி தங்களின் ஆபீஸில் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அப்பொழுது பாக்கியா மாற்று செல்வி அங்கு வருகின்றனர். இந்நிலையில் ராஜசேகர் கொடுத்த ஆர்டர் பற்றி எழில் கேட்க அதற்கு செல்வி சிரித்தபடி பாக்கியா அந்த ஆர்டரை ஏற்று செய்ய ஒத்துக் கொண்டதாக கூறுகிறார்.

இதை கேட்டு அதிர்ந்த எழில், பின்னர் சூப்பர் நீ எடுத்து செய் என நம்பிக்கையை தருகிறார். அப்பொழுது செல்வி எழிலிடம், உங்க பாட்டி மற்றும் அப்பா திட்டுனதுனால  உங்க அம்மாவுக்கு ரோசம் வந்து இப்படி செய்ததாக கூறுகிறார்.

ஆபீஸ்க்கு போன ஜெனி உடம்புக்கு முடியாமல் வீட்டிற்கு வருகிறார். அதை பார்த்த செழியன் ஜெனியை இதுக்கு தான் குழந்தை வேணான்னு சொல்றேன் என அவரை கண்டமேனிக்கு திட்டுகிறார். அதன் பின்னர் மோர் உடன் வரும் தாத்தா மற்றும் பாட்டி, ஜெனியிடம் என்ன ஆச்சு எதுக்கு திட்டுறான் என கேட்கிறார்கள்.

அப்பொழுது ஜெனி குழந்தை பெத்துகிறதுல செழியனுக்கு விருப்பம் இல்லை என கூறுகிறார். அதற்கு பாட்டி, உனக்கு விருப்பம் இல்லையா? இல்ல செழியனுக்கு விருப்பம் இல்லையா? என கேட்கிறார்.

அதற்கு ஜெனி அப்படியெல்லாம் இல்ல பாட்டி என வருத்தத்துடன் கூறுகிறார். அதன் பின்னர் ராதிகா வீட்டிற்கு செல்லும் பாக்கியா மற்றும் செல்வி, ராஜசேகர் வீட்டில் நடந்ததை கூற அதற்கு ராதிகா அவருக்கு நம்பிக்கை தரும் வகையில் பேசி அந்த ஆர்டரை எடுத்து செய்யுமாறு கூறுகிறார்.

மேலும் என்ன பிளான் வச்சிருக்கீங்க, தைரியமா துணிச்சு இறங்குங்க என கூறுகிறார். இதையடுத்து வீட்டுக்கு வரும் பாக்கியாவை ஏன் இவ்வளவு லேட் என கண்டபடி திட்டுகிறார் ஈஸ்வரி.

மேலும் ஈஸ்வரி, ஜெனிக்கு குழந்தை பெத்துக்க விருப்பம் இருக்கா? இல்லையா? நான் அவ கிட்ட கேட்ட செழியனுக்கு குழந்தை பெத்துக்க விருப்பம் இல்லைன்னு சொல்றா என கடும் கோபத்தில் பேசிக்கொண்டே உள்ளே போகிறார். அதன் பின்பு ஜெனியின் ரூமுக்கு போகும் பாக்கியா செழியனிடம் இது குறித்து பேசுகிறார். இத்துடன் இன்றைய கதை நிறைவுபெறுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here