‘நம்ம கல்யாணம் பண்ணிருக்கவே கூடாது, நானே எங்க அம்மா சாவுக்கு காரணம் ஆகிட்டேன்’ – குற்ற உணர்ச்சியில் கதறும் கண்ணன்!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது கண்ணன் தன்னால் தான் அம்மா இறந்து விட்டதாக சொல்லி கதறி அழுகிறார். மேலும் மொட்டை எடுத்து தன் அம்மாவிற்கு செய்ய வேண்டிய காரியங்களை செய்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் மூர்த்தி வீட்டிற்கு சென்று ஏன் இப்படி செஞ்சீங்க என்று கத்த இதனால் கோவமடையும் தனம் உன்னால் தான் அத்தை இறந்ததே என்று சொல்கிறார். நீ பாட்டுக்கு கல்யாணம் பண்ணிட்டு போயிட்ட அதனால அத்தை எவ்வளவு கஷ்டப்பட்டாங்கனு தெரியுமா?? என்று சொல்கிறார்.

அதுமட்டுமில்லாமல் அவங்க யாருகிட்டயும் பேசல, சரியா சாப்பிடல என்று சொல்கிறார். அந்த விஷயங்களை புரிந்து கொண்ட கண்ணன் வீட்டிற்கு சென்று தன் அம்மாவை நானே கொன்னுட்டேனே என்று கதறி அழுகிறார். எங்க வீட்டுல இருக்குறவங்களை பத்தி நான் கொஞ்ச கூட புரிஞ்சிக்கவே இல்லை.

அதுக்கும் மேல உன்னை நான் கூட்டிட்டு போய் அவங்க முன்னாடி நின்னு இருந்தா கண்டிப்பா ஏதாச்சும் பண்ணி இருப்பாங்க, நம்மள சேர்ந்து வச்சு இருப்பாங்க என்று சொல்கிறார். இப்படி அவசரப்பட்டு கல்யாணம் பண்ணி இப்படி எங்க அம்மா சாவுக்கு நான் காரணம் ஆகிட்டேனே என்று சொல்கிறார்.

ஐஸ்வர்யா எவ்வளவோ சமாதானம் செய்தும் அதனை கண்ணன் கேட்பதாக இல்லை. இதுக்கு நம்ம காரணம் கிடையாது என்று சொல்கிறார். அதன் பின் வீட்டில் உள்ள அனைவரும் இடிந்து போய் உட்கார்ந்திருக்க மூர்த்தி தனத்தை சமாதானம் செய்து தூங்க வைக்கிறார்.

அடுத்ததாக கண்ணன் தன் அம்மாவிற்காக மொட்டை எடுத்து அனைத்து சடங்குகளையும் செய்கிறார். அப்பொழுது மூர்த்தி, ஜீவா மற்றும் கதிர் அங்கு வர கண்ணன் அனைத்து காரியங்களையும் செய்யும் வரை அமைதியாக உள்ளனர். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here