Friday, May 3, 2024

கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த வீரருக்கான விருது – கோஹ்லி, அஸ்வின் பெயர் பரிந்துரை!!

Must Read

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த வீரர்களுக்கான பரிந்துரை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோஹ்லி மற்றும் தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் பலரும் இந்த பட்டியலில் உள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்:

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எனப்படும் ஐ.சி.சி தற்போது பல விருதுகளை கொடுத்து கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை கௌவரவிக்கவுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் கிரிக்கெட் துறையில் சாதித்தவர்களுக்காக இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளன. அதற்கான இறுதி பட்டியல் தற்போது ஐ.சி.சி சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவின் கிரிக்கெட் அணியினை சேர்ந்த பல வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோஹ்லி 5 பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதே போல் தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் தலைசிறந்த வீரர் விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வெற்றி பெற இருப்பவர் ஒட்டு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வீரர்கள்:

  • இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லி – உலகின் தலைசிறந்த வீரர்; உத்வேகம் அளிக்கக்கூடிய வீரர்; சிறந்த ஒரு நாள் போட்டி வீரர்; சிறந்த டெஸ்ட் வீரர்; சிறந்த 20 ஓவர் போட்டி வீரர்.
  • இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர், அஸ்வின் ரவிச்சந்தர் – உலகின் தலைசிறந்த வீரர்.
  • உலகின் தலைசிறந்த வீரர் பட்டியலில் பிற அணி வீரர்கள் – இங்கிலாந்தின் ஜோ ரூட், நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், தென் ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ், இலங்கையின் சங்காரா.
  • சிறந்த ஒரு நாள் போட்டிகளின் வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்தவர்கள் – இந்திய அணியின் மகேந்திர சிங் தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா, இலங்கையின் மலிங்கா, ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஸ்டார்க், தென் ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ், இலங்கையின் சங்காரா ஆகியோர் உள்ளனர்.
  • சிறந்த டெஸ்ட் வீரர் பட்டியலில் இடம் பிடித்துள்ள பிற அணி வீரர்கள் – இந்தியாவின் விராட் கோலி, நியூஸ்லாந்தின் வில்லியம்சன், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், இங்கிலாந்தின் ஆண்டர்சன், இலங்கையின் ஹெராத், பாகிஸ்தான் அணியின் யாசிர் ஷா ஆகியோர் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர்.
  • சிறந்த டி-20 போட்டிகளின் வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ள வீரர்கள் – ஆப்கானிஸ்தான் அணியின் ரஷீத் கான், இந்தியாவின் விராட் கோலி, தென் ஆப்பிரிக்காவின் இம்ரான் தாஹிர், ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச், இலங்கையின் மலிங்கா, வெஸ்ட் இண்டீஸ் கிறிஸ் கெய்ல் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
  • உத்வேகமிக்க வீரருக்கான பட்டியலில் இந்தியாவின் தோனி, விராட் கோலி மற்றும் பாகிஸ்தானின் மிஸ்பா உல்-ஹக் மற்றும் வேறு சில 6 வீரர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். வீரர்களுக்கான போட்டி இப்படி இருக்க வீராங்கனைக்காக பட்டியலையும் வெளியிடப்பட்டுள்ளன.

வீராங்கனைக்கான விருதுகள்:

கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த வீராங்கனைக்கான விருதுக்காக இந்தியாவின் மித்தாலி ராஜ் உட்பட 6 வீராங்கனைகளின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு உள்ளன.

- Advertisement -

1 COMMENT

  1. Kohli deserve the award. But not Ashwin , high headweight , arrogant & very inconsistent performance. Nowadays he doesn’t find place regularly even in IPLs, forget for international matches.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழக மின் நுகர்வோர்களே., புதிய உச்சத்தை தொட்ட மின்தேவை., மின்வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வீடுகளில் ஏ/சி. Fan உள்ளிட்ட மின் சாதனங்களின் பயன்பாடுகள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -