37 ஆயிரம் ரூபாய்க்கு கீழே சென்ற தங்கத்தின் விலை – நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்!!

0

சென்னையில் நேற்று ஒரே நாளில் 800 ரூபாய்க்கு மேல் ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்த நிலையில், இன்றும் அதிரடியாக சரிந்துள்ளது. இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 37 ஆயிரம் ரூபாய்க்கு கீழே சென்றுள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் நகை வியாபாரம் அதிகரித்து உள்ளதாக நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்றைய விலை:

கொரோனா பாதிப்பு உயிரிழப்புகளை மட்டுமின்றி ஈடுசெய்ய முடியாத பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய இன்னும் 10 ஆண்டுகள் கூட ஆகலாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ள நிலையில், தடுப்பூசி பரிசோதனை வெற்றி மற்றும் ஊரடங்கில் தளர்வுகள் உள்ளிட்ட காரணங்களுக்காக வர்த்தகம் செயல்பட தொடங்கி உள்ளது. இதனால் பிற பங்குகளின் மீதான முதலீடுகள் அதிகரித்து வருவது, தங்கத்தின் மதிப்பு சற்று குறைய காரணமாக உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

gold rate
gold rate

விளைவு, ஊரடங்கு நேரத்தில் கிடுகிடுவென அதிகரித்து வந்த தங்கத்தின் விலை இம்மாத தொடக்கத்தில் இருந்தே சரியத் தொடங்கி உள்ளது. இதனால் ஆகஸ்ட் மாத மத்தியில் 43 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம், தற்போது 37 ஆயிரத்திற்கும் கீழே சென்றுள்ளது. இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 காரட்) ரூ.4,600க்கும், ஒரு சவரன் ரூ.36,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு தங்கத்தின் விலை குறைந்துள்ளது நகைப்பிரியர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here