Wednesday, May 1, 2024

பெங்களூர் வன்முறை சம்பவம் -3 பேர் பலி!!

Must Read

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு மாவட்டத்தில் நடந்த வன்முறை சம்பவத்தால் 3 பேர் பலியாகி உள்ளது, மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பேஸ்புக் பதிவு:

பெங்களூரில் உள்ள காங்கிரஸ் கட்சின் உறுப்பினர் , ஸ்ரீனிவாசமூர்த்தி. அவரது உறவினர் நவீன் என்பவர் தந்து சமூக வலை தளமான பேஸ்புக் இல் இஸ்லாமியர்களை பற்றி அவதூறு பரப்பும் விதமாக பதிவு ஒன்றை செய்துள்ளார். அது, காட்டுத்தீ ஆக வைரலாக உள்ளது. இதனால் கோபமடைந்த இஸ்லாமியர்கள் அவரது வீட்டிற்கு சென்று வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

வன்முறையில் இறங்கிய மக்கள்:

இதனால், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வன்முறையை கட்டுப்படுத்த முயற்சி செய்தனர். ஆனால், விவகாரம் கை மீறி சென்றதால் போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

வன்முறையின் போது பலரும் கடைகளை அடைக்க வேண்டும் என்று அருகில் இருந்த வண்டிகளின் டயர்களில் தீ வைத்துள்ளனர்.

போலீசார் துப்பாக்கி சூடு:

இதனை அணைக்க வந்த தீயணைப்பு துறையினரையும் தாக்கியுள்ளனர். இதனால், சமாளிக்க முடியாத போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகள் வீச்சு, தடியடி ஆகிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

ரஷ்யா தடுப்பூசியை சரியாக பரிசோதிக்கவில்லை – ஜெர்மனி குற்றசாட்டு!!

அதுமட்டுமல்லாமல், துப்பாக்கி சுடும் நடத்தி உள்ளனர். இந்த வன்முறை சம்பவத்திற்கு காரணமான 100 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தால், 3 பேர் பலி ஆகி உள்ளனர்.

இது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. மேலும், இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

முதல்வர் ட்வீட்:

இந்த சம்பவம் குறித்து அந்த மாநிலத்தின் முதல்வர் எடியூரப்பா தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ இந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை கைது செய்யவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு போடப்பட்டுள்ளது. நேற்றிரவு நடந்த வன்முறைகளில் பத்திரிக்கையாளர், காவலர்கள் மற்றும் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் எதிர்பாராத ஒன்று. இத்தகைய செயல்களை அரசாங்கம் ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது” என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழக மக்களே., இந்த பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அனல் காற்று எச்சரிக்கை? வெதர்மேன் திடுக்கிடும் தகவல்!!!

தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சென்னை, வேலூர், கரூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -