ஐபிஎல் போட்டியை நடத்த ‘BCCI மாஸ்டர் பிளான்’ – உலகக்கோப்பை தள்ளிப்போக வாய்ப்பு..!

0

இந்தியாவில் பொழுதுபோக்கில் ஒன்றாக  கிரிக்கெட் விளையாட்டுபோட்டியான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) வருடாவருடம் நடைபெறும். ஆனால் தற்போது கொரோனாவைரஸ் காரணமாக தள்ளிப் போடப்பட்டுள்ள ஐபிஎல் போட்டிகளை ஆகஸ்ட் – செப்டம்பர் மாதங்களில் நடத்தலாமா என்பது குறித்து பிசிசிஐ யோசித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்டில் நடைபெறும் ஆசியா கோப்பை டி20 தொடரையும் தள்ளிப் போடுவது குறித்து பிசிசிஐ தீவிர யோசனையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டி

கொரோனாவைரஸ் காரணமாக உலக அளவில் அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் ரத்தாகி விட்டன மற்றும் தள்ளிப் போடப்பட்டுள்ளது. அதேபோல ஐபிஎல் போட்டிகளும் இந்த நேரம் நடந்து கொண்டிருக்க வேண்டிய வேளையில்  அதையும் ஏப்ரல் 15ம் தேதிக்கு தள்ளிப் போட்டுள்ளனர். ஆனால் தற்போது நாடு முழுவதும் லாக் டவுன் அமலில் உள்ளது. மேலும் கொரோனா வைரஸ் பரவலும் உச்சமடைந்துள்ளது.

ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள புதிய தேதிகள் அறிவிப்பு – உற்சாகத்தில் விளையாட்டு வீரர்கள்..!

எனவே இந்த மாதமும் போட்டியை நடத்த வாய்ப்பே இல்லை என்ற நிலையில் மேலும் தள்ளிப்போட வாய்ப்புள்ளதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதாவது வருகிற ஆகஸ்ட் – செப்டம்பர் மாத வாக்கில் இந்தத் தொடரை நடத்தலாமா என்ற யோசனையில்  பிசிசிஐ தீவிரமாக ஆலோசித்துவருகிறது. மேலும் இந்த தொடரை விரிவாக நடத்தாமல் சுருக்கமாக நடத்தவும் யோசித்து வருகிறார்களாம். அப்படி நடந்தால் இன்னொரு சிக்கலும் பிசிசிஐக்கு வரும்.

ஆசியா கோப்பை டி 20

அதாவது வருகிற ஆகஸ்ட் – செப்டம்பர் மாத வாக்கில் ஐபிஎல் தொடரை நடத்தலாமா என்ற யோசனையில்  பிசிசிஐ தீவிரமாக ஆலோசித்துவருகிறது. மேலும் இந்த தொடரை விரிவாக நடத்தாமல் சுருக்கமாக நடத்தவும் யோசித்து வருகிறார்களாம். அப்படி நடந்தால் இன்னொரு சிக்கலும் பிசிசிஐக்கு வரும். ஆசியா கோப்பையையும் தள்ளிப் போட வேண்டும். ஆசியா கோப்பை டி20 தொடர் இதே கால கட்டத்தில் துபாயில் நடைபெறும் என திட்டமிடப்பட்டுள்ளது.

ஆனால் ஐபிஎல் தொடரை ஆகஸ்ட் – செப்டம்பரில் நடத்தினால் அதே மாதத்தில் ஆசியா கோப்பை தொடரை நடத்த முடியாது. அதையும் தள்ளிப் போட்டாக வேண்டும். எனவே இது தொடர்பாகவும் தற்போது ஆலோசனையை பிசிசிஐ ஈடுபட்டுள்ளது. அதாவது ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்திற்குள் ஏதாவது ஒரு வசதியான பகுதியில் போட்டிகளை நடத்தலாமா என்று யோசிக்கப்பட்டு வருகிறதாம்.

மே மாத கடைசிக்கு வாய்ப்புண்டா?

அதேசமயம் மே கடைசியில் தொடரை தொடங்கும் சாத்தியக் கூறுகளையும் ஆராய்ந்து வருகிறார்களாம். இந்நிலையில் பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், “மே மாத கடைசியில் தொடங்கினால் கூட முழுத் தொடரை நடத்த முடியும். நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். தேவைப்படும் முடிவு உரிய நேரத்தில் எடுக்கப்படும். ஆகஸ்ட் – செப்டம்பர் குறித்து தற்போது யோசித்து வருகிறோம்” என்றார்.

வெளிநாட்டு வீரர்கள்

 இந்த வருட தொடர் ரத்து செய்யப்பட்டால் வெளிநாட்டு வீரர்கள் அதிக பாதிப்பை சந்திப்பார்கள். 9 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் ஐபிஎல் அணிகளில் இடம் பெற்றுள்ளனர். ஏற்கனவே போட்டி தள்ளிப் போயுள்ளதால் அவர்கள் அனைவருமே ஏமாற்றத்திலும் கவலையிலும் ஆழ்ந்துள்ளனர்.

கொரோனா தாக்கத்தால் கிரிக்கெட் ரசிகர்கள் சோகம் – கடைசி ஆயுதத்தை கையில் எடுத்த ICC அதிரடி முடிவு..!

ஆனால் கொரோனா வைரஸை தாண்டி போட்டியை நடத்த முடியாத சூழல் தற்போது நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் ஐபில் தொடர் மாற்றியமைப்பது மற்றும் ஆசிய கோப்பை  டி-20 ரத்தாகும் என்ற சந்தேகம் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றம் ஏற்படவுள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here