நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக் குடிநீர்..? சித்த மருத்துவமனைகளில் குவியும் மக்கள்..!

0

கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக் குடிநீரைப் பருக மக்கள் சித்த மருத்துவமனைகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.

கபசுர குடிநீரை குடிக்க குவியும் கூட்டம்..!

கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியாததால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் பாரம்பரிய சிகிச்சை முறைகளில் ஒன்றான சித்த மருத்துவத்தில் நோயை குணப்படுத்தும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நோயாளிகளுக்கு சித்த மருத்துவமனைகளில் 100 மில்லி அளவு கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது

இதனையறிந்து சென்னை அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ஏராளமானோர் கூடினர். கட்டுக்கடங்காத கூட்டத்தால் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் காத்திருந்து கபசுர குடிநீரை பருகினர்.

சுகாதாரத்துறை சார்பில் கபசுர குடிநீர்..!

பெரம்பலூர் மாவட்டத்தில் விஜயகோபாலபுரம் மற்றும் நாரணமங்கலம் கிராமங்களில் சுகாதாரத்துறை சார்பில் வீடு வீடாக சென்று கபசுர குடிநீர் தயாரிப்பதற்கான பவுடர் வழங்கப்பட்டது. இந்த கிராமங்களில் தங்கி பணிபுரிந்து வரும் வடமாநில தொழிலாளர்கள் சிலர் அண்மையில் தங்களது சொந்த ஊர் சென்று வந்ததால், முன்னெச்சரிக்கையாக அப்பகுதி மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம் மருத்துவர்களின் பரிந்துரையின் அடிப்படையிலேயே கபசுர குடிநீரை அருந்த வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். சாதாரண மூலிகைகளால் தயாரிக்கப்படும் கபசுர குடிநீரை பருகுவதால் பக்கவிளைவுகள் வராது என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் தனிமைப்படுத்தப்பட்டவர்கள், வெளிநாடு, வெளிமாநிலப் பயணம் மேற்கொண்டவர்கள் மற்றும் வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக கண்டறியப்பட்டவர்களுக்கு மட்டுமே கபசுர குடிநீரை பருக வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here