ரஞ்சியில் பங்கேற்றால் மட்டுமே இந்திய அணியில் இடமா?? டுவிஸ்ட் மேல் டுவிஸ்ட் வைக்கும் பிசிசிஐ!!

0
ரஞ்சியில் பங்கேற்றால் மட்டுமே இந்திய அணியில் இடமா?? டுவிஸ்ட் மேல் டுவிஸ்ட் வைக்கும் பிசிசிஐ!!
ரஞ்சியில் பங்கேற்றால் மட்டுமே இந்திய அணியில் இடமா?? டுவிஸ்ட் மேல் டுவிஸ்ட் வைக்கும் பிசிசிஐ!!

இந்தியாவில் நடைபெற உள்ள 50 ஓவர் உலக கோப்பைக்காக வீரர்களை தயார் செய்து வைத்துள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

பிசிசிஐ:

கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையை இந்திய அணி வெல்லாதது குறித்தும், எதிர்வரும் 50 ஓவர் உலக கோப்பையை எப்படி வெல்வது என்பது குறித்தும் முடிவுகள் எடுப்பதற்காக பிசிசிஐயானது கூட்டம் கூடியது. இந்த கூட்டத்தில், பிசிசிஐயின் தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் ஜெய்ஷா, இந்திய அணியின் பயிற்சியாளர்களான, ராகுல் டிராவிட், வி வி எஸ் லட்சுமணன், கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த கூட்டத்தில், பிசிசிஐயானது இந்திய வீரர்களை குறித்து பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. இதில், எதிர்வரும், 50 ஓவர் உலக கோப்பைக்கு இந்திய அணியை தயார்ப்படுத்துவதற்காக, முன்கூட்டிய 20 வீரர்களை தேர்வு செய்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தேர்வு செய்யப்பட்ட வீரர்களை, சுழற்சி முறையில் வரும் போட்டிகளில் பயன்படுத்த இருக்கிறது.

அய்யய்யோ.,இனி T20 போட்டிக்கு கேப்டன் ரோஹித் இல்லையா?? பிசிசிஐ வெளியிட்ட அதிரடி முடிவுகள்!!

மேலும், ‘யோ யோ’ மற்றும் ‘டெக்சா’ சோதனைகள் வீரர்களுக்கு கட்டாயம் எனவும், இந்தியாவின் உள்ளூர் போட்டியான ரஞ்சி, துலீப் டிராபி உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்றால் மட்டுமே தேசிய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. யோ யோ சோதனை என்பது, 20 மீட்டர் தூரத்தை குறிப்பிட்ட நேரத்தில் கடப்பதை ஆகும். இந்த ட்விஸ்ட்டை, யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள் என கிரிக்கெட் வட்டாரத்தினர் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here