விஜய் ரூட்டில் மகன் துருவுக்காக ஸ்கெட்ச் போட்ட விக்ரம்., அந்த இயக்குனரை வைத்து ஹிட் கொடுக்க பிளான்!!

0
விஜய் ரூட்டில் மகன் துருவுக்காக ஸ்கெட்ச் போட்ட விக்ரம்., அந்த இயக்குனரை வைத்து ஹிட் கொடுக்க பிளான்!!
விஜய் ரூட்டில் மகன் துருவுக்காக ஸ்கெட்ச் போட்ட விக்ரம்., அந்த இயக்குனரை வைத்து ஹிட் கொடுக்க பிளான்!!

நடிகர் துருவ் விக்ரம் நடிக்கும், புதிய படத்தை கில்லி பட பாணியில் எடுக்க, டாப் இயக்குனரை நடிகர் விக்ரம் கமிட் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

புதிய படம்:

தமிழ் சினிமாவின் சியான் என அழைக்கப்படுபவர் நடிகர் விக்ரம். சினிமாவில் இவர் ஒரு நிலையான அங்கீகாரத்தை பெற்றிருந்தாலும், அவரது ஒரே மகனான துருவ் விக்ரம் இன்னமும், தனக்கான இடத்திற்காக போராடிக் கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்தும், எதிர்பார்த்த அளவு வெற்றியடையவில்லை. இந்த நிலையில் மகனின் கெரியரை டாப்புக்கு கொண்டு செல்ல, விக்ரம் புது பிளான் ஒன்றை போட்டுள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதாவது, தன் மகனுக்கு ஒரு வெற்றி படத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காக கர்ணன், பரியேறும் பெருமாள் போன்ற சமூக அக்கறை கொண்ட படங்களை கொடுத்த இயக்குனர் மாரி செல்வராஜை வைத்து, தன் மகன் கேரியரை மாற்றி அமைக்க முடிவு எடுத்துள்ளாராம்.

அசீம், ADK இடையே நடந்த உச்சகட்ட போட்டி., கடைசியில் எதிர்பாராத டிவிஸ்ட்! இதான் காரணமா?

அதுவும் குறிப்பாக இந்த படம் விஜய் நடிப்பில் வெளியான, கில்லி படத்தின் சாயலில் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த படத்திற்காக நடிகர் துருவ் விக்ரம் கபடி கற்று வருவதாகவும், தன் உடல் வாகினை வேற லெவலில் தயார் செய்து வைத்திருப்பதாகவும் பேசப்படுகிறது. விரைவில் இதற்கான அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here