அய்யய்யோ.,இனி T20 போட்டிக்கு கேப்டன் ரோஹித் இல்லையா?? பிசிசிஐ வெளியிட்ட அதிரடி முடிவுகள்!!

0
அய்யய்யோ.,இனி T20 போட்டிக்கு கேப்டன் ரோஹித் இல்லையா?? பிசிசிஐ வெளியிட்ட அதிரடி முடிவுகள்!!
அய்யய்யோ.,இனி T20 போட்டிக்கு கேப்டன் ரோஹித் இல்லையா?? பிசிசிஐ வெளியிட்ட அதிரடி முடிவுகள்!!

மும்பையில் நேற்று நடைபெற்ற பிசிசிஐ கூட்டத்தில் பல அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிசிசிஐ:

இந்திய அணியானது கடந்த வருடம் பெரியளவிலான ஒரு தொடரை கைப்பற்றத்தை அடுத்து, சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வு குழுவை பிசிசிஐ நீக்கியது. இதனை தொடர்ந்து, இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவையும் பதவியிலிருந்து நீக்கி, ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமிக்க போவதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த தகவல்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் ஜெய்ஷா உள்ளிட்டோர் கொண்ட குழு கூட்டம் நேற்று மும்பையில் நடந்தது. இந்த கூட்டத்தின் மூலம் பல அதிரடியான முடிவுகளை பிசிசிஐயானது வெளியிட்டுள்ளது. இதில், இந்த வருடத்தின் 50 ஓவர் உலக கோப்பை தொடர் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகியவை நடைபெற இருப்பதால், இதற்கு ஏற்ப முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதாவது, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களுக்கு ரோஹித் சர்மாவே இந்திய அணிக்கு தலைமை தாங்குவார் என்று பிசிசிஐயானது அறிவித்துள்ளது. ஆனால், டி20 தொடருக்கான நிரந்தர கேப்டன் குறித்து பிசிசிஐ எந்த அறிவிப்பும் வெளியிட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக் குழுவே தொடர்ந்து செயல்படுவது சரியாக இருக்கும் என பிசிசிஐ முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here