என்னை யார் கூடவும் ஒப்பிடாதிங்க.., அதை எப்படி நீங்க சொல்லலாம்?? பிபி ஜோடியில் முட்டிக்கொண்டு வனிதா, ரம்யா கிருஷ்ணன்!!

0

விஜய் டிவியில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பிபி ஜோடிகள் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் வனிதா மற்றும் ரம்யா கிருஷ்ணன் இடையே பல பிரச்சனைகள் நடந்துள்ளது.

பிபி ஜோடிகள்

விஜய் டிவியில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபலங்கள் பலரும் இந்த போட்டியில் கலந்துக்கொண்டு அசத்தி வருகின்றனர். அதாவது அனிதா, சம்யுக்தா. ஷாரிக், சோம், கேபி, ஜூலி மேலும் பலர் இதில் கலந்துகொண்டுள்ளனர். வனிதாவும் இதில் கலந்துகொண்டார்.

இந்நிலையில் தற்போது வனிதா இந்த நிகழ்ச்சியை விட்டு தான் விலகுவதாக அதிகார்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. எதற்காக இந்த சீரியலை விட்டு வெளியேறினார் என்று பலரும் கேள்வி கேட்டு வந்தனர்.

ஆனால் வனிதா யார் என்று குறிப்பிடாமல் தன்னை அங்கு அவமானப்படுத்துவதாகவும், அதே நேரத்தில் தன் வளர்ச்சியை நினைத்து பொறாமைப்படுவதாகவும், ஒரு பெண்ணுக்கு இன்னொரு பெண் தான் எதிரியாக இருப்பதாகவும் கூறியிருந்தார். அரசல் புரசலாக அது ரம்யா கிருஷ்ணன் என்று தான் பலரும் நினைத்து வந்தனர்.

தற்போது வெளியிட்டுள்ள ப்ரோமோவில் அது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. அதாவது அனைவரின் நடனத்திற்கு ரம்யா கிருஷ்ணன் கமாண்ட்ஸ் சொல்ல அதே சமயம் வனிதாவையும் எதோ சொல்ல அதற்கு கோவமடையும் வனிதா தன்னை யாரிடமும் ஒப்பிட்டு பேச வேண்டாம் என்று சொல்கிறார். இதனால் கடுப்பாகும் ரம்யா கிருஷ்ணன் இது என்ன ஷோ?? இதை எப்படி ஓப்பிடக்கூடாதுனு நீங்க சொல்லலாம் என்று கத்துகிறார். இதிலிருந்தே தெரிகிறது வனிதா வெளியேறியதற்கான காரணம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here