விக்ரம் படத்தில் உலக நாயகனின் கேரக்டர் என்னன்னு தெரியுமா???…!லீக்கான சுவாரசிய தகவல்!!!

0
விக்ரம் படம் வெளியான 3 மணி நேரத்துக்குள் நடந்த சோகம் - கமலின் மொத்த உழைப்பும் கிளோஸ்!!
ஓடிடியில் களமிறங்கும் உலகநாயகனின் விக்ரம் திரைப்படம் - தேதியுடன் வெளியான அப்டேட்!!

ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் உலகநாயகனின் விக்ரம் படம். சில நாட்களுக்கு அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. தற்போது அதில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் ஒரு பார்வையற்றவர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

திரைப்படங்கள் என்றாலே அனைவருக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அதிலும் இஷ்ட நாயகர்கள் மற்றும் நாயகிகளின் படம்  என்றால் கேட்டகவே வேண்டாம். அந்த வகையில் தற்போது உருவாகிக்கொண்டிருக்கும் கமல் அவர்களின் படமான விக்ரம் படத்திற்கு மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஏனெனில் அதில் உலக நாயகன் கமல் அவர்களுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில் என்ற மூன்று பேரின் கூட்டணி உள்ளது. மேலும் பல நட்சத்திர பட்டாளங்கள் இதில் இணைய உள்ளனர். இதனால் ரசிகர்கள் மத்தியில் இந்த படம் ஒரு ஆவலை தூண்டி உள்ளது.

மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாக உள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. அந்த போஸ்டரில் கமல்,விஜய் சேதுபதி,பஹத் பாசில் என மூவரும் செம மிரட்டலான தோற்றத்தில் இருந்தனர். இந்நிலையில் அந்த படத்தில் கமல் அவர்களின் கதாபாத்திரம் குறித்து சில செய்திகள் கசிந்து உள்ளன.

அதாவது கமல் அவர்கள் முதலில் ஒரு காவல் அதிகாரியாக நடிக்க உள்ளனர் என சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது அவர் ஒரு பார்வையற்றவராக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவலும்  எந்த அளவிற்கு உண்மை உள்ளது என்பது தெரியவில்லை. மேலும் படக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருப்போம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here