ஹேமாவின் பெயரை சொல்லி ஏமாற்றும் வெண்பா – திருமணம் நடைபெறுமா?? பரபரப்பான திருப்பங்களுடன் ‘பாரதி கண்ணம்மா’!!

0

பாரதி கண்ணம்மா சீரியல் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. வெண்பாவின் திருமணத்தை கண்ணம்மா தடுத்து நிறுத்துவது போன்ற ப்ரோமோ ஒன்று வெளியான நிலையில் திருமணம் நடைபெறுமா? என்ற கேள்வி அனைவரின் மனதிலும் உள்ளது. இன்று, நாளைக்கு நடக்கவிருக்கும் திருமணத்திற்கு பாரதியை, ஹேமா பெயர் சொல்லி வெண்பா ஏமாற்றுகிறார்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் நேற்று திருமணம் நடக்க முடியாமல் போனதால் பாரதி டென்ஷனாக வீட்டிற்கு வருகிறார். அறிவு குட்டி ஹேமாவை சமாதானம் செய்து கொண்டிருக்கிறார். பாரதி அறிவிடம் காபி கேட்கிறார். அறிவு, அஞ்சலியிடம் சொல்லி கொண்டுவர சொல்கிறேன் என்று சொல்லவும் நீ கொண்டுவா இல்லையென்றால் காபியே வேணாம் என்று கூறுகிறார் பாரதி. அழுது கொண்டிருக்கிற குழந்தை பாரதியிடம் சென்றதும் அமைதியானது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பாரதி ஹேமாவை பற்றி பழைய நினைவுகளை சொல்லி குழந்தையிடம் சந்தோசப்படுகிறார். தான் ஒரு முடிவு எடுத்திருப்பதாகவும் அது சரியா? தவறா? என குழந்தையிடம் கேட்கிறார். பின் அறிவு வந்து காபி கொடுக்கிறார்.

பின் சௌந்தர்யாவும் அவரது கணவரும் காரில் வந்து கொண்டிருக்கின்றனர், பாரதியை பற்றி நேற்று நடந்தது அனைத்தையம் கூறுகின்றார். அகிலிடம் சொல்லி பாரதியை கண்காணிக்க சொல்கிறார்.

கிடுகிடுவென உயரும் பெட்ரோல் & டீசல் விலை!!

வெண்பா பாரதியை கல்யாணம் செய்யப் போகிற சந்தோஷத்துல கார்ல வராங்க.., அங்க கண்ணம்மாவ பார்த்து வம்பிழுக்க கண்ணம்மா கோவமா திட்டிவிட்டாங்க. வீட்டுக்கு வந்ததும் வெண்பா பாரதியிடம் போன் செஞ்சு ஹேமா தன் கனவுல வந்ததாவும், உன் வாழ்க்கையா பத்தி சொன்னதாகவும் பொய் சொல்லி நாளை நடைபெறும் திருமணத்திற்கு ரெடியாக இருக்க சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசொட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here