கிடுகிடுவென உயரும் பெட்ரோல் & டீசல் விலை – ஒரு லிட்டர் ரூ.100ஐ தொடும் அபாயம்!!

0

பெட்ரோல் மற்றும் டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நாடு முழுவதும் பெட்ரோல் விலை இன்னும் 15 நாட்களில் ரூ.100ஐ எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கக் கூடும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்து உள்ளனர்.

பெட்ரோல் & டீசல் விலை அதிகரிப்பு

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை சற்று அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. நாடு முழுவதும் இன்று பெட்ரோல் விலை ரூ.91ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ரூ.87ஆக உயர்ந்துள்ளதால் அத்யாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கும் என அச்சம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு விலை உயர்வுக்கு காரணம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்திருப்பதும், கச்சா எண்ணெய் இறக்குமதி செலவுகளும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவையாகும்.

இவற்றை கணக்கில் கொண்டு தான் பெட்ரோல், டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தினமும் மாற்றி அமைக்கின்றன. கடந்த ஜனவரி மாதத்தில் பெட்ரோல் விலை ரூ.85 என்ற நிலையில் இருந்தது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்ததால், கச்சா எண்ணெய் இறக்குமதியை பல்வேறு நாடுகள் குறைத்துக் கொண்டதால் அதன் விலையில் பெருமளவு சரிவு காணப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

petrol price
petrol price

இந்தியாவில் கச்சா எண்ணெய் விலை குறைப்பை மத்திய, மாநில அரசுகள் கலால் வரி உயர்வுக்கு பயன்படுத்திக் கொண்டன. கடந்த ஜூன் மாதம் முதல் ஊரடங்கில் ஏற்பட்ட தளர்வு காரணமாக ஆகஸ்ட் மாதத்தில் இருந்து கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கத் தொடங்கியது. இதனால், நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் உயர்த்துவதாக எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு கூறியது. கடந்த நவம்பர் முதல் மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை பைசா கணக்கில் உயர்த்தினர். தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் 6 பைசா முதல் 50 பைசா வரையில் அதிகரிக்கப்படுகிறது.

அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 100% இருக்கைகள்!!

கடந்த 2018ம் ஆண்டு மிக அதிகப்படியாக பெட்ரோல் விலை லிட்டர் ரூ.91க்கு விற்கப்பட்டது. அதேபோல் நாட்டில் மிக அதிகப்பட்சமாக நேற்றைய தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் மும்பையில் ரூ.90.34க்கும், டெல்லியில் ரூ.83.71க்கும், கொல்கத்தாவில் ரூ.85.19க்கும் விற்கப்படுகிறது. சென்னையில் இன்று ஒரு லிட்டருக்கு 25 பைசா அதிகரித்து ரூ.86.51, டீசல் ரூ.79.21க்கும் விற்கப்பட்டது.

கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள், வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசிய பொருட்களான காய்கறி, பால், மளிகை பொருட்களின் விலையும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பெட்ரோல் விலை இன்னும் 15 நாட்கள் அதிகரித்தால், ஒரு லிட்டர் ரூ.100ஐ எட்டிவிடும். இதுபற்றி எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், ‘‘கொரோனா பாதிப்பு குறைந்ததாலும் தற்போது கச்சா எண்ணெய் விலை ஏறுமுகத்தில் உள்ளது. அதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கலால் வரி உயாத்தியதும் விலை உயர்வுக்கு ஒரு காரணமாகும். இன்னும் சில தினங்களில் விலை ஏறும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here