பாரதி கண்ணம்மா சீரியலில் இனி அகிலனாக நடிக்க போவது இவர் தானாம் – கவலையில் ரசிகர்கள்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது அகிலன் சீரியலை விட்டு விலகிய நிலையில் தற்போது புதிய அகிலனை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

பாரதி கண்ணம்மா அகிலன்

பாரதி கண்ணம்மா சீரியலில் ஹீரோவை விட அதிக பிரபலமானவர் யார் என்று கேட்டால் அது அகிலன் தான். ஏனெனில் மக்கள் மத்தியிலும் நிலையான இடத்தை பிடித்தவர் இவர். இந்த சீரியல் ஆரம்பதில் இருந்தே அகிலன் கதாபாத்திரமும் ரசிகர்களுக்கு பிடித்து போனது.

கண்ணம்மாவை பாரதி தவறாக சித்தரிக்க தன் அண்ணன் என்று கூட பாராமல் கண்ணம்மாவிற்காக போராடினார். சௌந்தர்யா மற்றும் அகிலன் தான் கண்ணம்மா உத்தமி என்று நிரூபிக்க பல வேலைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் அகிலனுக்கு இந்த சீரியல் மூலம் கிடைத்த பெயரால் படவாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. அதாவது விஷாலின் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். மேலும் பிட்ஸா 3 படத்திலும் நடிக்கவுள்ளார். இதற்கிடையே தான் அவரால் பாரதி கண்ணம்மா ஷூட்டிங்கில் கலந்துகொள்ள முடியவில்லை.

barathi kannamma

அதனால் வேறு வழியில்லாமல் இந்த சீரியலை விட்டு விலகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் கவலையில் உள்ளனர். இந்நிலையில் புதிய அகிலனை அறிமுகப்படுத்தியுள்ளனர். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here