வெடித்து சிதறிய உலகின் மிக கொடிய எரிமலை.. ஷாக்கில் இந்தோனேசிய மக்கள்!!

0

இந்தோனேசியாவின் மவுண்ட் மெரபி எரிமலை வெடித்துச் சிதறியது. இதனால் மலையில் இருந்து எழுந்த புகை மண்டலமானது சுமார் 3.5 கிலோ மீட்டர் உயரம் வரை எழுந்துள்ளது.

இந்தோனேசியாவில் உள்ள ஜாவா தீவிற்கு அருகில் அமைந்திருப்பது மவுண்ட் மெரபி எரிமலை. இந்த எரிமலையின் ஆபத்தை கருத்தில் கொண்டு அதிகாரிகள் கடந்த ஆண்டின் இறுதியில் அதன் அபாய அளவை உயர்த்தினர். இன்று காலை இந்த எரிமலை வெடித்துள்ளது.

இதனால் எரிமலையின் 5 கிலோ மீட்டர் தூரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்தோனேஷியாவில் உள்ள கிட்டத்தட்ட ஐந்நூறுக்கும் மேற்பட்ட எரிமலைகளில் இந்த மவுண்ட் மெரபி எரிமலை தான் எப்போதும் சீற்றத்துடன் உள்ள எரிமலை ஆகும்.

குறிப்பாக கடந்த 2010-ஆம் ஆண்டு இதே எரிமலை கடுமையாக வெடித்தபோது, 310 மக்கள் பரிதாபமாக பலியானது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்பு 1930 ஆம் ஆண்டு இந்த எரிமலை வெடித்தபோது 1,300 பேர் பலியாகி உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here