டாப் 4 டிவி சேனல் சீரியல்களின் மெகா சங்கமம்… ஓ இதான் காரணமா??

0

டிவி சேனல்கள் அனைத்தும் பல வித புதுமைகளை தங்களின் சேனல்களில் புகுத்தி தங்களின் சேனல்லை விட்டு ரசிகர்களை நகராமல் வைத்து வருகின்றனர். அந்த வகையில் TRP யில் டாப்பில் இருக்கும் சேனல்கள் சன் டிவி,விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் டிவி ஆகியவை ஆகும். இந்நிலையில் இந்த சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களின் 4 கதாநாயகிகள் இணைந்து ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளார்.

டிவி சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் இல்லத்தரசிகள்,பெண்கள் மற்றும் இளசுகள் மத்தியிலும் பிரபலமான ஒன்று. இந்நிலையில் சன் டிவி,விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் டிவி உள்ளிட்ட சேனல்கள் மற்ற சேனல்களை காட்டிலும் சீரியல்கள் மூலம் அதிக ரசிகர்களை கொண்ட டிவி சேனல்கள். அதாவது அன்பே வா, ரோஜா, பாண்டியன் ஸ்டோர்ஸ்,பாக்கியலட்சுமி, செம்பருத்தி, ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, இதயத்தை திருடாதே, அபி டைலர் உள்ளிட்ட பல ஹிட் சீரியல்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள டிவி சேனல்களில் ஒளிபரப்பட்டு வருகிறது.

மேலும் இவற்றின் இந்த சீரியல்கள் பல விதவிதமான காட்சியமைப்புகள் உடன் ஒளிபரப்பாகி போட்டி போட்டு கொண்டு மக்களை கவர்ந்து வருகின்றன. மேலும் இந்த சேனல்கள் தங்களின் டிவி சிரியல்களுக்குள் மற்றொரு சீரியல்களை இணைத்து மகா சங்கமம் என்ற பெயரில் ஒளிபரப்பி வந்தது.

இந்நிலையில் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தனம், சன் டிவியின் பூவே உனக்காக சீரியல் பூவரசி, ஜீ தமிழ் டிவி சீரியல் செம்பருத்தி பார்வதி, கலர்ஸ் தமிழ் டிவி சீரியல் இதயத்தை திருடாதே சீரியல் சஹானா உள்ளிட்ட கதாபாத்திரங்களில் நடித்து வரும் நான்கு நடிகைகள் இணைந்து மல்லிகா பர்னிச்சர் என்ற விளம்பர படத்தில் நடித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here