பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் திடீர் மரணம் – அதிர்ச்சியில் திரையுலகம்!!

0

விஜய் டிவியில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவிற்கு அப்பாவாக நடிக்கும் வெங்கட் திடீரென மரணமடைந்துள்ளார். இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.

பாரதி கண்ணம்மா வெங்கட்

தற்போது பல சின்னத்திரையில் நடிகர்கள் மற்றும் நடிகைகளின் இழப்பை பார்த்து வருகிறோம். அதுவும் சமீப காலமாக நீண்டுகொண்டே வருகிறது. இன்றைக்கு தீப்பெட்டி கணேசனின் மரணத்திலிருந்தே வெளியே வர முடியாத இந்த சூழலில் தற்போது மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. விஜய் டிவியில் பல சீரியல்களில் நடித்து வந்த வெங்கட் என்பவர் திடீரென மரணம் அடைந்துள்ளார்.

ஈரமான ரோஜாவே, பாரதி கண்ணம்மா பல சீரியல்களில் நடித்திருந்தவர் வெங்கட். பாரதி கண்ணம்மா சீரியலில் கூட தனது நடிப்பை உள்வாங்கி நடித்திருப்பார். தற்போது இவரது மரணம் பலரையும் தாக்கியுள்ளது. இவரது மரணம் பற்றி விஜய் டிவி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. பலரும் இவருக்கு இரங்கல் வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here