ஒரு வருஷம் அதுக்குள்ள ஓடி போச்சு – லாக்டவுன் நினைவுகள்!!

0
lock down

கடந்த ஆண்டு இந்த நேரத்தில் தான் லாக்டவுன் என்னும் நிலைக்கு இந்திய மக்கள் அனைவரும் தள்ளப்பட்டனர். தற்போது இன்று லாக்டவுன் தொடங்கி ஒரு வருட முடிந்துவிட்டது.

லாக்டவுன் நினைவுகள்:

யாருமே எதிர்பாராத வகையில் இந்தியாவிற்குள் விமான நிலையம் மூலம் நுழைந்தது கொரோனா என்னும் கொடிய வைரஸ். தொடக்கத்தில் சிறிது மெதுவாக பரவினாலும் போக போக அசுர வேகத்தில் பரவி மக்கள் அனைவரையும் பாதித்து வந்தது. இதனை குறைப்பதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் கையில் எடுத்த முடிவு தான் லாக்டவுன். இதனால் பல்வேறு நலன் மற்றும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நலன் என்னவென்றால் எப்போதும் வேலை வேலை என்று ஓடிக்கொண்டிருந்தவர்கள் எல்லாம் வீட்டில் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு மகிழ்ச்சியாக இருந்தனர். மேலும் பழைய காலம் போல் வீட்டினுள் அனைவரும் ஒன்று சேர்ந்து விளையாடியும் வந்தனர். இதனால் பல்வேறு குடும்பங்கள் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் இதனால் ஏற்பட்ட பாதிப்பு என்னவென்றால் பல மக்கள் இந்த லாக்டவுன் காலத்தில் தங்களது வாழ்வாதாரத்தையே திளைத்தனர்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

பலருக்கு வேலையின்மை, மேலும் பலருக்கு அடுத்த நேரம் உணவுக்கு என்ன செய்வது என்ற சோகமான நிலை பலருக்கும் ஏற்பட்டது. ஒரு வழியாக கடந்த ஆண்டு இறுதியில் லாக்டவுனில் இருந்து பல தளர்வுகள் அளிக்கப்பட்டு அனைத்து தரப்பு வேலைகளும் துவங்கி மக்களின் இயல்பு நிலை தொடங்க ஆரம்பித்தது. தற்போது இந்த நிகழ்வுகள் நடந்து இன்றுடன் ஒரு வருடம் முடிந்து விட்டது. நாம் அனைவரும் அந்த காலகட்டத்தில் பல பாடங்களை படித்துள்ளோம் என்பது தவிர்க்க முடியாத உண்மை. மேலும் அந்த நினைவுகள் சிறிது கசப்பாக இருந்தாலும் பெரிதும் மறக்கமுடியாத ஒன்று.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here